உடைந்த வளையலின் இருதியோசை
இக்கதை இக்கால காதலர்களுக்கு பொருந்துமா என்று தெரியாது. ஆனால் உண்மையான காதலர்களுக்கு இது பொருந்தும் . காதலில் ஆண் பெண் என்று பால் வேறுபாடுகள் இன்றி காதலி போருக்கு இக்கதை ஒரு வருத்தத்திற்குரிய ஒன்றாகவும் அவர்களின் மனம் உடையும் என்பதில் ஐயமில்லை.
அலெக்சாண்டர் குப்தரின் செம்மணி வளையல் என்னும் நாவலில் உள்ள ஒரு கதையினை வாசிக்கும் போது தோன்றிய தலைப்பு . அந் நாவலின் வேரா என்ற பெண்ணை செல்ட் கோவ் ஒருதலையாக காதலித்து வருகிறான். உண்மையான அன்பின் வெளிப்பாட்டை இக்குறு நாவல் படி காணலாம். வேராவிற்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனாலும் அவன் நெடுங்காலமாக காதலித்து வந்தான் . அவளுக்கு திருமணம் ஆகி எட்டு வருடமான பின்பும் அவன் காதலை தொடர்கிறான். கணவனும் செல்ட் கோவ் எழுதிய காதல் கடிதங்களை பெரிதாக பொருட்படுத்தவில்லை. எட்டாவது வருடத்தில் ஒரு விலை உயர்ந்த பொருளை அனுப்பி வைக்கிறான் செல்ட் கோவ் .அதனை பார்த்ததும் இதற்கு ஒரு முடிவு செய்தாக வேண்டும் என்று தன் கணவரிடம் கூற வேரோவின் கணவனும் அவனது தோழனும் செல்ட் கோவ்வினை காண அவனது வீட்டிற்கு செல்கின்றனர். செல்ட் கோவை சந்தித்து இருவரும் பேசிய போது செல்ட் கோவ் வேரோவின் மீது உள்ள அன்பினை தெரிவித்தான். அவ் அன்பினை பார்த்ததும் வேரோவின் கணவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. செல்ட் கோவ் இறுதியாக வேராவின் கணவனிடம் கேட்டுக் கொண்டது எனது கடிதத்தை ஒரு முறையாவது வேரா படிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தான். நான் உங்களது வாழ்வில் இனிமேல் தொந்தரவு செய்ய மாட்டேன். என் உயிரை நான் மாய்த்துக் கொள்கிறேன் என்று வேரோவின் கணவரிடம் கூறியிருப்பான் . அதன்படி வேராவிடம் சென்று கடிதத்தை கொடுத்து படிக்கும்படி சொன்னான். அந்த கடிதத்தில் செல்ட் கூறியது கடிதத்தை நீ படித்து முடிக்கும் பொழுது என் தலை துண்டு பட்டிருக்கும் . என்னால் உன்னை அடைய முடியாது என்று தெரிந்து விட்டது. இக்கடிதத்தினை படித்து முடிக்கும் போது நான் இறந்து விடுவேன்.
என் தலை துண்டு பட்டு கிடக்கும் என்று எழுதப்பட்டிருந்ததை கண்டதும் வேரா அவன் இறந்த இடத்திற்கு சென்று அவன் தலையையும் உடலையும் சேர்த்து பிடித்து தன் மடியில் வைத்த போது கனவில் தன் காதலன் தன்னை விட்டு மறைவது போன்ற ஒரு எண்ணத்தை அவளிடம் எழச் செய்கிறது. அவள் தன் காதலின் பிரிவினை உணர்ந்து அழத்தொடங்குகிறாள்.
காதலின் இன்பம் காதலிக்கும் தருணத்தில் மட்டுமே என்ற வரிகளை வென்றது இக்கதை...
ஒரு பெண்ணின் மனதை ஆள் கடலுக்கு ஒப்பிட்டாலும் ஆள் கடலும் ஓர் முடிவு கொண்டது என்பதை இம்மனங்கள் ஏற்க மறுக்கிறது. பெண்ணை பூவிற்கு ஒப்பிடும் பொழுது பூவின் காலம் ஓர் நாள் என்பதை இவ்வுலகம் மறுக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக