பாலினம் மூன்று
மாற்றம் ஒன்றே நிலையானது
அவர்கள் தரும் 1 ரூபாய்க்கு
வாசகத்தில் மட்டும்.
மாற்றமடைவதை எளிதில்
ஏற்பதில்லை
பண்புள்ளோர் உயர்திணையாம்
பண்பு அற்றவர் அஃறிணையாம்
பண்புகளில் ஒன்று மிக்கோறை
உயர்திணையில் சேர்ப்போம்..
அப்பாலுக்கு பிறிதோர் விதியையும் பிறப்பிப்போம்..
ஆசிர்வதித்தால் தெய்வ
ஆசீர்வதிப்பு
குடும்ப நபரானால் குடி கெட்டு
விடுமாம்..
அவர்கள் தரும் 1 ரூபாய்க்கு
உள்ள சக்தி , மதிப்பும்
அவர்களுக்கு இல்லையே
இவ்வுலகில்..
அஃறிணைக்கு ஆட்கள் அதிகம்
இவ்வுலகில்
அஃறிணைக்கு அறிவு மிக்க
உயிர்களை நேசிக்கும் பண்பு
அவ்வுறவுகளிடம் உண்டு
சில உயிர்கள்
அவ்வுறவை நேசிக்காமையால்....
கருத்துகள்
கருத்துரையிடுக