ஓர் நட்பு , ஒரு காதல்
காதலின் பிரிவில்
முன்னாள் காதல் என்ற
சொற்கள் பயன்படுத்தப்படும்.
ஆனால்
நட்பின் பிரிவில் முன்னாள் நண்பன் என்பது இல்லை.
ஏனெனில் ஒரு நட்பின்
இடத்தை மற்றொரு நட்பு நிரப்ப
முயற்சி செய்வதில்லை.
ஆனால் காதல் அவ்வாறு
முயற்சிக்கும்...
இதனால்
பழைய நினைவுகளை மீண்டும்
மீண்டும்🔁 நினைக்கும்.
காதலை விடவும்
நட்பு சிறந்தது.
சிறந்த நட்பாக இருப்பின்.
(சில முகமூடிகள் அல்ல.. )
எதையும் எதிர்பாராத
நட்பு என்னும் வட்டத்தில்
பிரிவு ஒன்று வரும்
எனில்
அதனை ஏற்க மறுக்காது .
பிரியும்
ஆனால்
ஒருநாளும் தனது
நட்பின்
தரத்தை குறைப்பதில்லை.
கண்டிப்பாக
ஏதே ஒன்றை எதிர்பார்த்து தான்
காதல் வரும்.
இல்லை எனில்
வரையறை ஏதேனும் ஒன்றிற்கு உட்பட்டு தான்
காதல் என்பது வரும்.
ஹார்மோன்களின் செயல்பாட்டினால்
காதல் வரும் என்பர்.
தற்போதைய
கால நிலைக்கு சிறிது
திருத்தம்
காதல்கள் வரும் என்பர்.
( விதிவிலக்காக சிலவும் உண்டு)
உடலில்
ஹார்மோன்கள் என்பது
இல்லை எனில்
காதல் இல்லை.
காதலில்லையேல்
நட்பு மட்டும்
இவ்வுலகை ஆண்டிருக்கும்.
சாதி மதங்களை
விரட்டவும் , மறுக்கவும்
காதலை விடவும்
நட்பின் பங்களிப்பு
அதிகமாக
இருந்திருக்கும்.
ஏனெனில்
நட்பின் மீதான இவ்வுலக பார்வை வேறு,
காதலின் மீதான பார்வை வேறு. இப்பார்வை எக்காலத்திற்கும் பொருந்தியது தான்.
நட்பிற்கான கலப்பு பார்வையை
விட
காதலுக்கான கலப்பு பார்வை குறைவே..
சங்க இலக்கியங்கள்
பேசலாம்.... காதலின்
படிநிலையை..
இன்றைய செய்திகளை
அதனோடு ஒப்பிடின்
இங்கு யாரும்
தலைவனும் இல்லை,
தலைவியும் இல்லை.
அதற்காக காதலில்
புரட்சி
பரவாது என்றில்லை
பரவுவதற்கான காலம் தற்போது குறைவு...
நட்பில் புரட்சி
பரவும் , காலம்
தாண்டியும் நிற்கும்.
சரியான நட்பை பெறுகையில்....
முடிந்த காதல்
மீண்டும் கிடைக்கையில்
குறைகளை சரி செய்ய
விடாது,( நினைக்காது.)
முடிந்த நட்பு
அவ்வாறு அல்ல..
முறிந்ததற்கான
காரணம் சரியெனில்
மீண்டும் திரும்பத்
அவ்விடத்தில் மற்றொருவரை
நிறுத்தாது.
கருத்துகள்
கருத்துரையிடுக