அலைகளின் புலம்பல்

தண்ணீர் பிரச்சனை... 
 தண்ணீர் பிரச்சனை....
கடலோர மக்களுக்கு
 தண்ணீர் பிரச்சனை ... 
இதில்
 கடல் 
நீரை 
குடிநீராக மாற்றும் திட்டம் 
 ஒரு கேடு.... 

மக்கட் பண்பு அல்லாதோர் அஃறிணை
 ஆனால் 
மக்கட் பண்பு உள்ள
 அனைத்துமே 
உயர்திணை தான் 
அதில் எல்லாம்
 அடங்கும் என்பதே
 உயிர்த்துணர வேண்டியது.. 

கடலில்
 மீனவர்களின் 
உயிரிழப்பை தடுக்க 
அனைத்து வகையான இயந்திரங்களும் அரசிடம் உள்ளது .
ஆனால் 
எதையும் பயன்படுத்த
 மாட்டோம் .
இயந்திரம் உப்பு நீரால் பாதிக்கப்படும் .
அனைத்து இயந்திரங்களும் அரசுக்கு முக்கியம் ....மனித உயிர்களை விட.. 

திண்ணை 
இடித்து
 வாகனம் 
நிறுத்தம் வந்தது .
அவ்வாறே உயர்திணை அஃறிணை ஆனது.. 

பென்சன் 
பத்திரத்தில் பெயரிடு 
சுதந்திரப் போராட்ட வீரனாய்...
சுதந்திரப் 
போராட்டத்தில் 
ஈடுபடு 
அனைத்தையும் இழந்த மூடனாய்.. 

எங்களது 
கடல் பயணத்தில் 
நான்கு பேர் தான் 
உயிரிழப்பு . 
அதனால் 
அரசு அறிவிப்பு எங்களுக்கு இல்லை ....
ஐந்து மீனவர்கள் 
கடலில் உயிரிழந்தால்தான் ஹெலிகாப்டர் வரும் என்று 
அரசு அறிவிப்பு...

காற்றைப் பற்றி கடலோர மக்களிடம் கேள் ..
ஏன் ?என்றால் 
காற்றோடு வாழ்வினை பிணைத்தவர்கள் அவர்களே.... 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்