மூக்குவாழி ( ஆண்கள் அணியும் மூக்குத்தி)
மூக்கு குத்துவது என்பது பெண்களுக்கான ஒன்று. இச்செய்தி அனைவருக்கும் தெரிந்த கண்கூடாக பார்க்கும் ஒன்று தான்.
காது குத்துவது என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று. இதுவும் நாம் அறிந்ததே.....
ஆனால் ஆண்களுக்கும் மூக்கு குத்துவர் என்ற செய்தி சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.
தமிழ்நாட்டில் இன்றளவும் குறிப்பிட்ட சமூக மக்கள் இதனை பின்பற்றுகின்றனர்.
இதற்கு காரணம் அச்சமுக மக்களின் சில நம்பிக்கைகளே. இதனை விசித்திர வழக்கம் என்று எல்லாம் கூறிவிட முடியாது நாம் அறியாத ஒன்று அவ்வளவுதான் . பாட்டன் பெயரை மறக்கும் சமூகம் தானே இது.....சில நம்பிக்கைகளை மறப்பதில் தவறு ஏதுமில்லை
மூக்கு வாழி போடுவதற்கான காரணம்
ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் குழந்தை மூக்கு வாழி அணிந்து இருக்கிறது என்றால், அக்குழந்தைக்கு முன்னம் பிறந்த பெண் குழந்தையோ அல்லது ஆண் குழந்தையோ திடீர் மரணம் ஒன்றினை சந்தித்து இருக்கும், அல்லது தொடர்ச்சியாக இரு ஆண் குழந்தைகள் அல்லது பெண் குழந்தைகள் பிறந்து இறந்திருக்கும்.....அடுத்து பிறக்கும் ஆண் குழந்தைக்கு மூக்கு வாழி போடுவது வழக்கம். இவ்வாறு மூக்கு வாழி போடுவதால் அக்குழந்தை தெய்வக் குழந்தையாக மாற்றப்படுகிறார்கள் என்றும் தமிழ் சமூகம் முழுக்க மூக்கு வாழி அணியும் வழக்கம் ஒன்று இருந்தது. இதன் காரணமாகவே மூக்கன் ,மூக்காண்டி என்று ஆண்களின் பெயரும் மூக்கம்மாள் ,மூக்காயி போன்று பெண்களின் பெயரும் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. பெண்கள் மூக்கு வாழி அணிந்ததாக எந்தவித குறிப்பேடும் இல்லை . தற்போது மூக்கு வாழி என்பது அணியும் பழக்கம் குறைந்து உள்ளது. அதற்கு மாறாக காதுவாழி அணியும் பழக்கத்தை கொண்டுள்ளனர். ஆண்கள் அணியும் கடுக்கன் என்பதும் மூக்கு வாலியும் ஒன்றல்ல....கடுக்கன் என்பது காதில் அணிவது மூக்கு வாலி என்பது மூக்கில் அணியப்படுவது..மூக்கு வாழிக்கு மாற்றாக அணியப்படும் அணிகலன் காதுவாழி எனப்படும். மூக்கு வாழி என்பது ஒரு தங்கத்தால் ஆன சிறுவளையத்தில் ஒரு பாசி கோர்த்து முடியப்பட்ட அமைப்பில் இருக்கும். இதில் கோர்க்கப்படும் பாசி சிவப்பு,கருப்பு அல்லது தங்கத்தால் ஆன பாசி போன்றவை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
மூக்கு வாழி செய்யும் முறை
மூக்கு வாளி செய்வதிலும் கூட ஏழு என்ற எண் வந்து விளையாடுகிறது . அதாவது ஏழு வீடுகளில் பிச்சை (தர்மம் )எடுத்து அதில் வரும் பணத்தையும் தம்முடைய பணத்தையும் பயன்படுத்தி மூக்கு வாழியினை செய்வார்களாம் . ஒரு ஆணுக்கு மூக்கு வாழி அணியப்படுகிறது என்றால் ......அதனை தானே கழற்றக் கூடாது என்றும் அதுவாகவே விழும் வரை அதனை அணிந்து இருத்தல் வேண்டும் என்றும் நம்பிக்கை உள்ளது என்பர் .....
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் கிராமத்தில் இன்றளவும் ஆண் பிள்ளைகளுக்கு மூக்கு வாழி அணியும் பழக்கம் நடைமுறையில் உள்ளது .
திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடைமுறையில் இருந்த இந்த பழக்கம் மெல்ல மெல்ல அழிந்துவிட்டது. ஆனால் இப்போது மன்னார்கோவில் கிராமத்தில் அந்த பழக்கத்தை கடைபிடித்து வருகிறார்கள்
இது போன்றதொரு பழக்கம்
அதாவது மூக்கு வாளிக்கு பதிலாக காது வாளி அணியும் பழக்கம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக காணப்படுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக