காடு நான்
வசந்த காலத்தை இழந்த காடு நான்
என்னிடம் பறவைகளின் பாடல்கள் இல்லை..
நதிகளின் ஓலம் தான் உள்ளது..
ரசிப்பற்று கிடக்கிறேன் ..
நன்னீரில் ஊரிய மரப்பட்டை போல..
எறும்பு கூட்டங்களின் உணவு தேடல்களை
நான் என் வாழ்வில் கண்டதே இல்லை..
கரையான்களின் தீவிரத்தை மட்டுமே கேட்டு கொண்டிருந்தேன்..
கருத்துகள்
கருத்துரையிடுக