நிலம், உழைப்பு, உரிமை: கிராமிய சமூக அமைப்பின் அடுக்குகள்
கிராமிய வகைப்பாட்டின் அடிப்படையில் நிலத்தில் தொடர்பு கொள்ளாத எவர் இலாபத்தை மட்டும் அடைகிறார் மற்றும் எவ்வித கொடுமைகளிலும் ஆளாகாமல் இருக்கிறார் என்பதை ஆய்ந்தறிவதாக இக்கட்டுரை உள்ளது.
ஊரொன்றிற் நாலுகுடி உழுதநில மும்நான்கு
ஆறுவேலி இறைநூறு வந்தக்கால் - கூறில்
ஆறோடு முக்காலும் அஞ்சேகால் நாலரையும்
ஏழரையும் ஆகுமாம் பங்கு.
ஓர் ஊரில் நான்கு குடும்பங்களானது உழுத நிலம் 24(4x6) வேலி1 ஆகும். இறை 100 பணம் வந்ததால், அந்நான்கு குடும்பங்களும் உழுத நிலத்தில் பங்கு வைத்திருந்த முறையானது, 6 3/4, 5 1/4, 41/2, 71/2 ஆகும்.
மேற்குறிப்பிட்டுள்ளப்பாடல், வரி(இறை- வரி) செலுத்தும் முறையில் உள்ள அவரவர்களுக்கான பங்கினை எவ்வாறு பிரித்துக்கொள்வர் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. இதனை தற்போதுள்ள நிலவுடைமை சமூகத்தில் பொருத்திப்பார்க்கும் வகையிலும் அமைந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.
நெல் விளைச்சலை மையப்படுத்தி இப்பாடலை அணுகும் தருவாயில், நிலம் கையகப்படுத்தப்படும் முறையினை நான்காகப் பிரிக்கலாம்.
1. நில உரிமையாளர் ( அதாவது உயர்குடியினைச் சார்ந்த, பட்டா உள்ள நபர்)
2. குத்தகைதாரர் ( சாதியப் படிநிலை அடிப்படையில் பட்டா உள்ள நபருக்கு அடித்த சாதியைச் சேர்ந்த நபர்)
3. கூலியாட்களைத் திரட்டுப்பவர்கள்( குத்தகைதாரின் நேரடியாகச் சம்பந்தப்பட்ட ஆட்களாக இருப்பர், தலித்துக்களாகவும் இருப்பர்)
4. கூலியாட்கள் ( தலித்துக்கள்)
( தென்மாவட்டல்களில் இன்றும் விளைச்சல் நிலங்களைச் சுற்றியுள்ள அமைப்பு இவ்வாறு தான் உள்ளது.விருதுநகர் மாவட்டம்- திருச்சுழி- பகுதியில் உள்ள தலித்துக்கள்)
இப்பிரிவின் அடிப்படையில் நில உரிமையாளர், குத்தகைதாரர், கூலியாட்கள் இவர்கள் அனைவரும் நிலத்தின் நேரடி தொடர்பாளர்களாக உள்ளனர். ஏனெனில் விளைச்சல் , சுற்றுச்சூழல் இதனால் ஏற்படும் நன்மைத்தீமைகளால் பாதிப்படைவோரும், பயனடைவோரும் இவர்களே. கூலிகளுக்கு என்ன பயன் ஏற்பட போகிறது? என்ற கேள்விக்குத் தொடர்ச்சியாக வேலையாவது அவர்களுக்குக் கிடைக்கும். நில உடைமையாளர், குத்தகைதாரர் இவரும் கூலிகளை விட அதிகம் நிலத்தின் மீது உரிமை கொண்டாடினும் உணர்வு ரீதியாகவும், அடுத்த வேலை உணவு ரீதியாகவும் கூலிகளே நிலத்தினைச் சார்ந்து இருப்பர்.
பொதுபுத்தியின் அடிப்படையில் கூலியாட்களைத் திரட்டுவரும் நிலத்தினைச் சார்ந்தவராக தென்படலாம். ஆனால் அவர்களுக்கு நிலத்தின் மீதான உறவென்பது மேற்குறிப்பிட்டவர்களைக் காட்டிலும் வேறுப்பட்டது. அறுபடக் கூடியதும், அதனால் அவர்களுக்கு நட்டம் ஏதும் இல்லாத நிலையிலேயே இருப்பர். ஆட்களைத்திரட்டுதல் என்ற வேலையே அவர்களுடையது, ஆதாலால் விவசாயத்தினை மட்டேமே நம்பி இருக்கும் நிலை ஆட்களைத் திரட்டுவோருக்கு இல்லை என்பதுவே உண்மை.
நில உடைமையாளருக்கு என்ன நட்டம் ஏற்படுகிறது? என்ற கேள்விக்கு, நில உடைமையாளர் அரசாங்கத்திற்கு நிலவரியினை வழங்கும் அளவிற்காகவாவது, நிலம் அவருக்கு ஏதேனும் ஒருவகையில் பயன்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையுள்ளது. குத்தகைதாருக்கு குத்தகை வைத்த பணத்தையோ ,அல்லது அதற்கு மேற்பட்ட பணத்தையோ சம்பாதித்தாக வேண்டிய கட்டாய நிலையில் இருப்பார். கூலிகளுக்கு நிலங்கள் விளைந்தே ஆக வேண்டும், இல்லையேல் பொருட்சேர்ப்பு என்பதே இல்லாத கூலிகள் உடனடியாகத் தங்கள் வாழ்வாதரங்களை இழந்து நிற்கும் நிலையைத் தவிரத்து வேறு எந்த நிலையும் ஏற்படாது. இந்நிலையில் அவர்களுக்கு உதவவோ, அந்நிலையை சமாளிக்கவோ யாரும் வரமாட்டார்கள். அவரவர் அவர்களுக்கான நட்டத்தைக் கூறி, அதனால் தங்களுக்கு என்ன காரியம் நிகழ வேண்டும் என்பதிலேயே இருப்பாரே ஒழிய, கூலிகளைப் பற்றிய சிந்தனை துளியேனும் வராது.
இலாபத்தில் மட்டும் பங்குக் கொள்பவர் கூலியாட்களைத்திரட்டுவோர் மட்டும் தான். இதற்கான காரணங்கள் முன்னர் கூறப்பட்டது. நட்டத்தில் பங்கு கொள்ளாத இவர்கள், நிலத்தின் மீது தொடர்பு கொள்ளாத இவர்கள் அடையும் இலாபமே.. உழைப்பற்ற, உணர்வற்ற இலாபமாக் கொள்ளப்படும்.
கருத்துகள்
கருத்துரையிடுக