தரம்
தன்னம்பிக்கை
ஆயிரம் முறை தோற்றினும்
அலுத்து விடாத மனம்
எதுவோ அதுவே வெற்றியை
அடையும் கணையாக செயல்படுகிறது.
இவ்வுலகில் அதிகம் தான்
ஆம்.......
தாழ்த்தும் மனங்கள்
இவ்வுலகில் அதிகம் தான்
நீ அவைகளை வீழ்த்துவதற்கு
தயாராக இரு....
சில அவமானங்கள் நாம்
எதிர்பார்த்தே .. நடக்கிறது
அதே போல்
சில உதாசினங்களும்...
சில துன்பங்களுக்காக
பலப்பல இன்பங்களை
இழக்கிறோம் நாம்....
நடப்பது நடக்கட்டும்...
எதுவாயினும்
நீங்கள் நிகழ்த்த நினைப்பதை
நடத்துங்கள்...
துன்பங்களை கண்டு
துயன்றோமானால்.....
இறுதி வரை துயரத்தை
மட்டுமே படுவோம்....
எதையும் கண்டு கொள்ளாமல் இருக்க பழகுங்கள்...
எதுவாயினும் எட்டி போகும் வரை.. . ..
மீண்டும் மீண்டும் வரின்
அழிக்க தயார் செய்யுங்கள்
உங்களை.... நீங்களாகவே.....
இல்லை
அழிய தயார் ஆகுங்கள்....
வலியது பிழைக்கும்...
ஓர் நாள்...
எள் அளவும் தளரதே....
தினமும் உன்னை
புதியதோர் நிலத்தில்
உற்பத்தி செய்...
புதிய புதிய வளம்...
உன்னை
புதுப்பிக்க உதவும்....
ஏனெனில்
பழமையை இவ்வுலகம்
போற்றியே பாழ் படுத்தும்..
புதியதாக உரு கொண்டே இரு..
எவரின் அறிவுக்கும்
உன்னை புலப்படுத்தாமல்...
இளமையில்
இன்பத்தை துறந்து விடு..
முதுமையில் நிம்மதியாக
இருக்க....
இன்பத்தை விட
நிம்மதி முக்கியமாதலால்...
அதே போல்
உண்மையாக இருப்பதை விட
அறமாக இரு...
உண்மை ஒருவித
இன்பம் தான்...
அறம் நிம்மதியாகும்...
கருத்துகள்
கருத்துரையிடுக