அவள் தனக்காகவும் வாழட்டுமே..
அவள் மீது இவ்வுலகிற்கு அச்சம்..
ஆதலால் தான் அவளை பல வகையான கட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறது...
அவளை சித்தரவதைச் செய்தும் இவ்வுலகத்திற்கு மனம் அசையவில்லை..
அவள் மூலமாக அவளையே கொடுமை செய்கிறது இவ்வுலகம்...
காலத்தின் பிடியிலும் இவ்வுலகத்தின் பிடியிலும் சிக்கித் தவிக்கிறாள்.. அவள்
தன்னை மீட்டெடுக்க நினைக்கும் போதெல்லாம் அவளைக் கடவுளெனவும், பூமி போன்றவளெனவும், சில பண்புகளை அவளுக்கேயுரியதென கூறி மடைமாற்றம் செய்கிறதிவ்வுலகம்...
அவளும் என்ன செய்வாள்.. மாற்றத்திற்கான வழிகளை தேடுவதைத் தவிர..
இவ்வுலகில் உள்ள அனைத்தும் வியக்கக் கூடிய ஆச்சரியங்களைக் கொண்டவை..
அவளும் அவள் போன்றோரும் இதில் இல்லையென சொல்வதற்கு இவ்வுலகம் முயற்சிக்கிறது..
பிறரை பார்த்து முடிவெடுக்கும் கண்களை அவள் பிடிங்கி எறிகிறாள்..
பிறரின் நலன் விரும்பியாக இருப்பதில் அவளுக்கு மகிழ்வு தான்..
ஆனால்,
அவள் தனக்காகவும் வாழட்டுமே..
அவள் முடிவுகளில் அவளிருக்கட்டுமே..
அவள் தனக்காகவும் கனவு காணட்டுமே...
அப்பொழுது தான் மற்றவர்களுக்கான இவ்வுலகத்திற்காக எத்தனை விதமான இழப்புகளை ஏற்றிருக்கிறாளென தெரியும்..
அவளுக்கான அவள் சிந்தனையில் குழப்பம் இருக்காது, தடுமாற்றம் கண்டு தளற மாட்டாள்...
மீண்டும் மீண்டும் விழுந்து புன்னகைக் கொண்டு எழட்டும்...
கருத்துகள்
கருத்துரையிடுக