அவள் புதிது
https://kasthurigai.blogspot.com/
அவள் ஏனோ அங்கு நின்றுக் கொண்டிருக்கிறாள்
அவள் ஏனோ அங்கு நின்றுக் கொண்டிருக்கிறாள்
உலகெங்கும் அவள் மீதான கேள்வி அது
அவள் நினைவில் இந்நாள் எனக்கு பிடித்தவாறு கடந்து விட்டது என்று சந்தோசம்...
உலகக்கேள்விகளை அவள் கண்முன் கொண்டு வருவதில்லை..
ஏனென்றால்
அக்கேள்விகளில் அவளில்லை.. இவ்வுலகமாக அவர்களே உள்ளார்கள் அக்கேள்வியில்...
அவள்போல் வாழ இவ்வுலகிற்கு ஆசை தான்..
சடங்காய் போன விமர்சனங்களைக் கண்டு நின்று தவித்துக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்...
அவளுக்கு ஒவ்வொரு நாளும் புதுமையான அனுபவங்கள், மகிழ்வுகள் வந்து சேர்கின்றன..
இவ்வுலகின் கனவுகள் கட்டமைக்கப்பட்டு கட்டுண்டுக் கிடக்கையில்..
அவளது கனவுகள் வானில் சிறகை விரிகின்றன...
அவள் சிறகு பாதிப்படையத்தான் செய்கிறது..
சரி செய்ய கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் மகிழ்கிறாள்.... 🙂
சடங்காய் போன விமர்சனங்களைக் கண்டு நின்று தவித்துக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்... படித்தவுடன் மனதில் பதிந்த வரிகள்.சிறப்பு.என்றேனும் ஒருநாளாவது இக்கவிதையில் உள்ள வரிகள் போல் வாழ மாட்டோமா என ஏங்கும் பெண்மன சிந்தனைகளை வெளிக்கொணருகிறது.சிறகுகள் வீசி சுதந்திர வானில் பறக்க ஆசை கொள்ளும் அனைத்து பெண்மனங்களின் வெளியாய் இவ்வரிகளை நான் காண்கிறேன்.வானில் பறக்கவிடப்படும் காற்றாடியாய் நூல் அளவு அதிகாரத்தால் ஒடுக்கும் சமூகத்தில், நூலறுந்து திசைகள் எட்டும் தன் மன வெளி போல் என்றும் உயர்ந்து பறந்து சிறந்திட வாழ்த்துக்கள் கத்தூரி.....
பதிலளிநீக்குநன்றி.. ஆர்த்தி
பதிலளிநீக்குஎ
உங்களது கருத்துக்கள் என்னை வளர்க்கட்டும்