அவளின் மொழிகள்
அன்பென்பதும், பாசமென்பதும், காமமென்பதும் வேறும் உணர்வு தான்...
அடடா! அவள் இவ்வுலகைப் புரிந்து விட்டாள் போலும்..
இதில் என்ன வியப்பென்றால் என்னை அவள் வழி நடத்த சிறிதும் விரும்ப வில்லை.. அவள் போல் மாற என்னை கட்டாயப்படுத்த வில்லை..
அது தான் அவள்.. என்றாள் என்னிடம்..
உனக்கு புரியும் போது நீ தனித்த சுதந்திரத்தைக் காண்பாய்...
அச்சுதந்திரம் உனக்கு நிம்மதியையும், உழைக்கும் நம்பிக்கையையும் தரும்...
என்னை விட இவ்வுலகத்தை வேறு விதமாக நீ ரசிக்கலாம்..
என்பதே அவள் எனக்கு தந்த உபதேசங்கள்...
எனக்காச்சரியம்.. அவள் எவ்வளவு தீர்க்கமாய் பேசுகிறாள்..
அவள் முன்னாளில் இருந்ததை விட நிம்மதியாய் அலைந்து திரிகிறாள்..
யாரும் அவள் முதுகில் இல்லை..
அவளும் யார் முதுகிலுமில்லை...
அவளுடைய சுகதுக்கங்களை அவளே பார்த்துக் கொள்கிறாள்... யாருடைய வழி நடத்தையலையும் எதிர்பார்க்க வில்லையவள்....
இத்தனையும் இப்போது உணர்ந்து கொண்டே ஒரு புன்சிரிப்பு.. என்னிதழில்.. 🙂
இந்த காலங்கள் எவ்வளவு கற்றுக் கொடுத்துள்ளது.. விளைவுகளை மட்டும் நினைத்து வாடின மனது..
இப்போது செயல்களையும் உன்னிப்பாகக் கவனிக்கிறது..
பரந்து விரிந்த அவள் சிந்தனை துளிகளில் நானிருக்கிறேன்.. என்கிறாள்...
என்னில் இப்போது முழுமையாக நானிருக்கிறேன்.... என்கிறாள்... அவள்...
ஒவ்வொரு மனிதருக்குமான அடிப்படை உரிமையாக இந்த சுதந்திரம் உள்ளது. எனக்கெவ்வளவு உள்ளதோ அது என் பார்வையில் தெரிவோர்க்கும் உள்ளது. எவ்வகையிலும் யாருக்கும் பாதிப்பு இல்லாமல் வாழ்வதையே சன்மார்க்கத்தாலும் வலியுறுத்துகிறோம். சுதந்திரத்திற்கு அம்மார்க்கம் படி போல.
பதிலளிநீக்குஇந்தப் பரந்தகன்ற பிரபஞ்சத்தில் கலாச்சாரம் பண்பாடு எனும் பல மீன்களூடே இடையூறுகளின்றி மிதப்பதை யாரும் தடுத்துவிடாது இருக்க, அங்கு கடலோதங்கள் போல அலைந்து வரும் அமைதி எனும் கீதத்தை மெல்ல மெல்ல கேட்டு அணைய, யாருமற்ற நெடிய வயல்வெளிகளின் கன்னத்தை வருடிவரும் தென்றல் நம்முடலையும் வருடுகையில் நாளையைப் பற்றிய எண்ணமின்றி சுகமாக கவலையின்றி கிடப்பது போலான லட்சிய சுதந்திரம். என்றைக்குப் பொதுவில் வாய்க்குமோ!
எல்லாரது பெருமூச்சுகளும் உலகத்தையே ஒட்டுமொத்தமாக இழுத்துக் கொள்ளும் அளவிற்கு கனவு பெரிது.
கட்டமைக்கப்பட்ட கருத்துகளுக்குள் அடங்கிப்போனோராய் தவிக்கும் எல்லாரின் (குறிப்பாய் பெண்களின்) மனத்தை ஒருமுறையேனும் குத்தித் தைக்கும் சிவனியின் சொற்கள்
யாரும் அவள் முதுகில் இல்லை..
அவளும் யார் முதுகிலுமில்லை
சுதந்திரத்திற்கான செந்தீ இது.
அதுவும் பெண்களிடமிருந்தே தீயாய், விடுதலைக்கான அரசியலாய், ஆயுதமாய்..
கடலில் தோன்றும் நன்னீர் போல தோழமையான கருத்துக்கள்... நன்றிகள் பல தோழர்
பதிலளிநீக்கு