விவரி உன்னியல்பை

                   அந்தச் சிட்டுக்கு சிறகு உள்ளது.. 
                  உங்களுக்கு கால்கள் மட்டுமே ஏன் தெரிகிறது. 

                    அதற்கு பறக்கவும் தெரியும்.. அது பறந்து தான் பார்க்கட்டுமே..
                    அது பறப்பதால் உங்களது வரலாறு குலையப் போவதில்லை.. ஆகமங்களும் சடங்குகளும் அதோடு நின்று விட போவதில்லை... 

பிறகேன் அப்பறவையின் சிறகுகளை வரலாறு , ஆகமங்கள், சடங்குகளைக் கொண்டு துடிதுடிக்க வெட்டுவதும் ஒடித்துடுவதுமான செயல்களைச் செய்கிறீர்.. 

அச்சிட்டை விடுவியுங்கள்..

ஏன்? அப்பறவையை பயம் கொள்ளச் செய்கிறீர்.. 
அன்பென்றும், பாசமென்றும் நாடகமாடுகிறீர்.. 

அது பறவை பறக்கட்டும்.. அதற்கான கூட்டை அதுவே கட்டி கொள்ளட்டும்.. 

அச்சிட்டை விடுவியுங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள் புதிது

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

பேதா- கதை