சொல்வது அவள்
இவ்வுலகத்தின் அழிவும் ஆக்கமும் எழுத்தில் உள்ளது...
அவரவர் எண்ணத்திலும் கூட...
தூய சிந்தனையும், முற்போக்கான எழுத்துமே சமத்துவமான சுந்திரத்திற்கான வழி...
அறநூல்களை கற்பதும்... நல்வழியில் நடப்பது போன்ற பாவனை செய்வுதும் ஆகாது...
அனைத்தையும் படித்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நடிப்பதையும் தொடக்கம் செய்கிறோம்...
சரியாக நடக்க விரும்பும் போதெல்லாம் இந்த வயதில் இப்படி தான் தோன்றும், காலம் கடந்தால் நீயும் வாழ்க்கையைத் தேடி ஓடி விடுவாயென நம்மை பின்னுக்கே இழுக்க முயற்சிக்கும்.. மனிதர்கள்
வாழ்க்கை என்பதற்கு பல விளக்கங்களை வயதிற்கு ஏற்றாற்போல் அமைத்துக் கொள்கிறது இச்சமூகம்...
நல்லதை செய்யெனவும், பிறருக்கு உதவெனவும், குடும்பத்தைப் பாரெனவும், பிறருக்கு தெந்தரரவு செய்யாமலிருந்தால் போதுமெனவும் இன்னும் பல. நேரத்திற்கும் இடத்திற்கும் ஏற்றது போலமையும்... இவ்வாழ்கைக்கான விளக்கங்கள்...
என்னவோ உன்உயிரின் சுவாசத்தை உணர்.. பின் அனைவரின் சுவாசத்தையும் கவனி.. எல்லாம் வெவ்வேறு விதம்... அதனதன் போக்கில் சுதந்திரமாக இருந்தால் போதுமென நினை..
சுவாசத்தில் நஞ்சு இருப்பின்( அ) சேர்ப்பின் அதனை நீக்குவதும் நம் கடமையென நினை..
..... அவளின் மொழி..
கருத்துகள்
கருத்துரையிடுக