இல்லாத காலங்கள்
எதிர்காலத்திலேயே நம்முடைய சிந்தனை எல்லாம்...
ஆம் தானே..
நாளை என்று தானே அத்தனையும் விடுகிறோம்..
நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை செய்துக் கொள்ளலாம்..,
எல்லாம் நாளைச் சரியாகிவிடும்..
இது போன்ற எண்ணங்களுக்கு இன்று என்பது அடித்தளம் ஆகிறது..
என்பதையே மறந்து நாளை என்றொரு கண்ணாடி வீட்டினைக்கட்டிக் கொண்டிருக்கிறோம்..
இல்லை.. என்றால் இருக்கவே செய்கிறான் இறைவன் என்று இல்லாத ஒருவனிடம் பழியைப் போட்டுவிடுவது..
விதி, நேரம், என்ற படர்கை காரணங்களால் பரிசுத்தமான நம்மை அவ்வினையில் இருந்து விளக்கிக் கொள்வது..
இவ்வுலகில் நாம் தானே ஆதிக்கம் நிறைந்தவர்களாக உள்ளோம்..
எல்லாவற்றுக்கும் நாம் தானே காரணம் என்பதையும் ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்..
அழிப்பதில் முதன்மை நாம்.. விலகுவதிலும் முதன்மையே..
ஆக்குவதிலும் அவ்வாறு இருப்போம்... ஆக்கம் நிறைந்தவர்களாக மாற்றம் கொள்வோம்..
நல்லதொரு மாற்றத்தினை உண்டு பண்ணுவோம்..
சமதர்மத்துடன் வாழும் மாற்றத்தினை பெறுவோம்..
புதிய சிந்தனை, செயல்பாடு போன்றவை தோன்றட்டுமே...
நம் எண்ணம் எதிர்காலம் பற்றியது - நன்றாகச் சொல்கிறீர்கள்
பதிலளிநீக்குநன்றி ஐயா
பதிலளிநீக்கு