தெய்வங்களுக்கு நடத்தப்படும் அபிஷோகங்களும், பூசைகளும்

 பாலாபிஷோகம் தொடங்கி பஞ்சாமிர்தபிஷோகம் வரை உனக்கு நடத்தப்படுகிறது..


அது போற்றி வணங்குதல் இல்லை. 


நாங்கள் வயிறு வாடிய நிலையில் உள்ளோம் என குறிப்பால் உணர்த்தும் தூற்றி வணங்குதல் நிலையே.. 


நீ வந்து உதவாவிடினும் உன்னால் உடுத்த முடியாத பட்டாடையும், சுவைக்க முடியாத உணவையும், உன் உடம்பில் பதிக்க முடியாது போன ஆபரங்களையும் எங்கள் துயர் நீக்க தரலாமே.. 


கல்லிடம் மனம் இருப்பதாக நினைக்கும் இந்த கல் நெஞ்சக்கார்களின் மனத்தில் வாழுகிறாயே.. கல்லாய் போன கடவுளே...


நான் கடவுள் மறுப்பாளர் அல்ல. எனக்கென்று ஒரு கடமை இருக்கிற பொழுது, அக்கடவுளுகென்று ஒரு கடமை இருக்கிறது.. அதை  செய்ய தூண்டுகிறேன்.. 


நான் தவறிழைக்கும் போது என்னை தண்டிக்க எவ்வளவு உரிமையை எடுக்கிறாரோ.. அதே உரிமையை அவர் கடமையைச் செய்ய மறுக்கிறபோது நாமும் கையில் எடுப்பதில் தவறில்லை. .. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள் புதிது

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

பேதா- கதை