வாழ்வின்றிப் போரின் உதிரம்தானே வலிய நுண்ணிய வலியினைக் கொண்டுதானே உன் வாழ்வின் பெரும் கீறலான வெட்டென மாதந்தோறும் நடக்கும் மாநிலத்தில் ஓர் உண்ணவியலா உணர்ச்சியதுவே... உண்ணவியலா இறைச்சியதுவே.. உண்ணும் பழக்கப் பிறப்பதுவே... துக்கமில்லா வீட்டில் வீரியம் கொண்ட பேரழுகைச் சத்தம் ஒன்று.. நாதியற்று கிடந்து, தனது மூன்று, ஐந்தென நாட்களைக் கழிக்கிறது..
கடுமையான வியர்வையும், அசௌகரியத் தன்மையையும் நெடுநாட்கள் அனுபவித்ததில்லை.... என்றாவது தென்றல் வந்து தழுவும் என்பதற்காக.. தினம் தினம் என்னை சுவீகரித்துக் கொள்வதால்.. இடப்பெயர்வின் போது மனம் ஏனோ சமநிலையை அடைவதுபோல் நினைவு.. ஒருவர் பார்வையில் சமமானவராக, மற்றொருவர் பார்வையில் கீழானவராக.. இதுவே பெரும் சமத்துவநிலையாகவே படுகிறது.. இப்பால்மனதிற்கு..
நானாக அப்பொருளைத் தேடிக்கொள்ளவில்லை... அதற்காக ஆசையும் படவில்லை.. எவ்விதத் தொடர்புமே இல்லை எனக்கும் அப்பொருளுக்கும்.. தானாக வந்தது.. உன்னுடனே இருப்பேன்.. பாதியில்.. இது நிரந்தரமல்லாத வன்முறையான வாழ்க்கை. நாம் பிரிவோம் என்றது.. நானே வலுக்கட்டாயமாக பிடித்திலுத்தேன்... உடையும் நிலையில்.. நானே அதனைக் கொண்டு சென்றேன்.. விட்டுவிட்டேன்... மீளவில்லை.. மீளாது மீண்டாலும் என் மனம் அப்பொருளோடு வாழாது..
கருத்துகள்
கருத்துரையிடுக