இயலாது என்று இங்கொன்றுமில்லை. ஆனால் உருப்படியானது என்று இங்கெதுமில்லை. கடுங்குளிறோ.. வாடைக்காற்றோ.. கடலிடமிருந்து வந்தால் அம்மீனவர்களுக்கு அது காதல் பரிசல்லவோ.. இரவெல்லாம் பெரும் தனிமையில் உன்னோடு(கடல்) நானும்.. என் உயிர்கலந்த உன் காற்றும்.. போதவில்லை.. சில நாழியாவது உன்னுள் ஊடுருவ சொல்கிறது.. என் கண்கள்..
எந்த வித சுகாதார ஒழுங்கிற்கும், பொது ஒழுங்கிற்கும் பொருந்தாதவையே மோட்சம் பெறுவதற்கான வழி ஆகும்.... _ சிவனி இப்பாலித்தினருக்குள் எத்தனை பிணக்குகள்.. எதனைச் சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்ல வேண்டும்? எவரிடம் இதனை இத்தனை அழகாய் சொல்வது? அவர்களின் கண்கள் என்னை எப்படி எல்லாம் ஆய்வு செய்யும்? இம்மாதிரியான பல அர்த்தமுள்ள கேள்விகளுக்கு விடை எழுதியே ஓய்ந்து போகின்றன. என் வார இறுதி நாட்கள்.... என்ன இது இத்தனை பதட்டங்கள்... எதிலும் நான் ஆசை கொண்டு உள்நுழையவில்லையே... நான் வருகையை மதிப்பளிக்க மட்டுமே இருக்கிறேன் அப்படியிருந்தும் எனக்கு ஏன் இழப்பு குறித்தான இவ்வளவு பதட்டங்கள்....
நானாக அப்பொருளைத் தேடிக்கொள்ளவில்லை... அதற்காக ஆசையும் படவில்லை.. எவ்விதத் தொடர்புமே இல்லை எனக்கும் அப்பொருளுக்கும்.. தானாக வந்தது.. உன்னுடனே இருப்பேன்.. பாதியில்.. இது நிரந்தரமல்லாத வன்முறையான வாழ்க்கை. நாம் பிரிவோம் என்றது.. நானே வலுக்கட்டாயமாக பிடித்திலுத்தேன்... உடையும் நிலையில்.. நானே அதனைக் கொண்டு சென்றேன்.. விட்டுவிட்டேன்... மீளவில்லை.. மீளாது மீண்டாலும் என் மனம் அப்பொருளோடு வாழாது..
கருத்துகள்
கருத்துரையிடுக