இல் ஆள்
பெண் கேட்கிறாள்...
கதவு நன்றாக தாழிட்டுள்ளதா...
ஆம்...
ஏன் எப்போதும் உனக்கு அந்த அடைத்தலில் இவ்வளவு சந்தேகம்..
நீ நிர்வாணமாக இருந்தாலும் போவது என் மானம் தானே...
ஆம்...
பெரும்பாலும் வெளி பக்கம் தாழிட்ட கதவுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை...
_____
குற்றசாட்டிற்கான மொழி தனது வாக்கிய அமைப்பில் தன்னை விலக்கிக் கொண்டு முழுமையடைதலைப் பெறுகிறது... விலக்கி கொள்ளுதலினால் குற்றம் விழைந்திருக்குமே ஒழிய வேறெதும் என் கண்ணிற்கு படவில்லை
_____
மெய் இழந்த கவிதைக்காக ஆயிரம் மெய்யுள்ள கவிதைகள் எழுத்தினால் நினைவு கூறுகின்றன.
______
எழுதப்பட்ட கவிதைகளின் பேனாக்கள் தங்களது உரிமங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்கிறன.
அவைகளின் உரிமையாளர்களை கிசுகிசுத்துக் கொண்டே....
____
கருத்துகள்
கருத்துரையிடுக