பேதா- கதை

           இந்த கதை தலைப்பைப் பார்த்தவுடன் என்ன இது என்று நீங்க யோசிக்க இன்று அளவுக்கு ஒன்னு தான். ஏன் ❓ என்றால்  நம்மகிட்ட இருக்கிற இருந்த மனிதர்களோட  அறிய காலம்தான் அது.                                    

               தாத்தா என்ற ஒரு உறவு நம்ம கூட இருந்த காலம்தான். இப்போது  கொஞ்சம் இந்த தலைப்பை உங்களால் புரிந்துகொள்ள முடியுமென்று நினைக்கிறேன்.                              
                  ஒரு தாத்தா பேத்திக்கு சொன்ன கதைகளில் ஒன்றுதான்.  பேத்திக்கு தாத்தா சொல்கிற கதை எப்படி இருக்கும்.. பேதா வார்த்தை உங்களுக்கு எப்படி  புதுசா இருக்கோ அப்படி பேத்திக்கு புதுசாவும் சிரிப்பாவும்  சிந்தனையாகவும் இருக்கும்.                                                                          
                   அதனால் தான் இக்கதைக்கு  " பேதா" கதை என்று  தலைப்பு வைக்க ஆசை வந்தது. கதைக் கேட்ட கேள்வி ஞானம் வரும் என்று சொல்வார்கள் உண்மைதான் கேள்வி ஞானம் வரும் என்பதே உண்மை.                                                                      
                              கதை தொடங்குகிறது. உரையாடலாக...                                                                         தாத்தா: ஒரு குட்டி பொண்ணு தினமும் வானத்துக்கு போறாளாம்.                                                                                  பேத்தி:  எப்படி போறா? எதுக்கு போறா?                                                             தாத்தா: இந்த வானத்தை அழகு செய்ய போறாளாம்.                                                                                     பேத்தி: எதுக்கு வானத்தை அழகு செய்யனும்...                                                    தாத்தா: இரவு ஆனா இருட்டா இருக்குல  நமக்கு இருக்குறது  ஒரு நிலா என்று அந்த நிலாவை உடைத்து வானம் முழுவதும் தனி தனியாக  வீசிட்டோம்னா கொஞ்சம் அழகான வெளிச்சமான கிடைக்கும்  என்று செய்றாளாம். 

                  பேத்தி: ஓ.. அதுனால தான் கொஞ்சம் கொஞ்சமாக நிலா காணமல் போகுதா. அந்த பொண்ணு யாரு தாத்தா.                                                                   தாத்தா: நீ தான் போற.. உன்ன போல தாத்தா பாட்டி கதை கேட்குற  எல்லாரும்  போறாங்க.
                      பேத்தி: அப்படியா...      எப்படி நா போறேன்.  எனக்கு போன மாதிரி ஞாபகம் இல்லையே? 
                          தாத்தா: நீ தூங்கும் போது கனவுல போவ. எழுந்ததும் உனக்கு சாபம் இல்லாம போகுது. ஆனால் நீயும் அந்த வேலையை செய்ற.. 
                            பேத்தி: உம் சரி தாத்தா. என்கூட யாரு வருவா ரொம்ப தூரம் ஆச்சே. 
                             தாத்தா: நீ மட்டும் தான் போவ தாத்தாக்கு கால் வலிக்கும் நா வரமாட்டேன். நீ போனு சொல்லிடுவேன் நீ மட்டும் தான் போவ... 
             இந்த பூமி இன்னும் சுதந்திரத்தை முழுமையாக சுவாசிக்க  வில்லை , ஆனால் வானம் இன்னும் தான் உரிமையை முழுமையாக  விடவில்லைை. 
               நீ தனியாக போகலாம்.. 

                பேத்தி: நீ வந்தா நல்லா இருக்குமே தாத்தா...எனக்கு உன்ன ரொம்ப பிடிக்குமே .  உன்னை கூட்டிகிட்டு போகலைன்னு வருத்தமா இருக்குமே. 

                 தாத்தா: நான் உன்ன போல போனேன்,  சின்ன வயசுல. நானும் இனிமேல் போவேன், தனியா அப்போ யாரையும் நானும் கூட்டிக்கிட்டு போக மாட்டேன். நீ போற மாதிரி இல்ல, திரும்பி வர மாட்டேன்

                 பேத்தி: சரி விடு தாத்தா. நான் நிலாவை உடைச்சா அது காலியா போயிடுமே, என்ன பண்றது அதுக்கப்புறம் என்ன நான் செய்றது. 

                   தாத்தா: அது மீண்டும் வந்துருமா ... நம்ம ஊர்ல தண்ணி இல்லாத குளத்துல மழை பெய்து தண்ணி வருதில்லையா ,அது மாதிரி சூரியன் நீ நிலாவை உடைக்கும் போது நீ திரும்பி ஒடச்சு வானத்தை அழகுபடுத்தவும் செம்ம படுத்தவும் உதவி செய்வார், அதாவது நிலாவ முழுமை படுத்துவாரு.. 
                     நீ உடைக்க சூரியன் கொஞ்ச நாளில் வட்ட நிலாவாக ஆக்கிடுவார். 

                       பேத்தி: சூரியனா உதவி செய்வார் .அப்போ சுடுமே எனக்கு. 

                         தாத்தா: சூரியன் நல்லவங்கள ஒன்னும் செய்யாது. நீ நல்லது செஞ்சா, உனக்கு நல்லது தான் வரும். வேற எதுவும் வராமல் சூரியனே உன்னை பார்த்து பாரு. 

                           பேத்தி: அப்படியா நல்லது என்றால்? என்ன தாத்தா  அப்ப நல்லது இல்லாம ஒன்னு இருக்கா. 

                             தாத்தா: நீ செய்ற காரியத்தினால ஏழை  முகம் சிரிச்சா அது தான் நல்லது .
                                உன் காரியத்துல  உனக்கு பெரிய பெரிய எதிர்ப்பு வந்தா அது தான் நல்லது .
ஆனா இது மாதிரி நிறைய கஷ்டங்கள் வரும் நல்லது செய்றப்ப நீ மட்டும் உன்னையும் உன் குணத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. 
                       உனக்கு இந்த உலகத்தை அறிமுகம் செய்யாதே  இந்தஉலகத்துக்கு உன்னை அறிமுகம் செய் .
                       அப்துல் கலாம் சொல்லி இருக்காங்க அது  படி நடக்கணும். 
சரியா.. 
                          பேத்தி: சரி தாத்தா. இப்படியே தினமும் நடக்குமா இரவுல. 

                           தாத்தா: ஆமா நீ கனவு கண்டால் நீ இப்போ அந்த வேலையை செய்வ.  யாருக்கு கனவு வருதோ அவங்க போய் அந்த வேலையை செய்வாங்க. 
    
                             பேத்தி: சரி தாத்தா எனக்கு ஏன்? நான் கண்ட கனவு நான் செய்யறது ஞாபகம் இருக்க மாட்டேங்குது. 

                                தாத்தா:  நல்லத ஞாபகம் வச்சுக்க கூடாது. நல்லது ஞாபகம் இருக்காதுமா. மறந்தா தானே நீ திரும்பி திரும்பி ஆர்வமா அந்த வேலையை செய்வே .மறதியும்
நல்லது தான். 

                     பேத்தி: சரி நான் தூங்க போறேன் தாத்தா. இன்னைக்கு எனக்கு கனவு வந்தாலும் வரும் தாத்தா நிறைய நட்சத்திரம் வானத்தில் தூவனும்.  சரி நான் தூங்க போறேன் தாத்தா... 

                                 தாத்தா: ம்..தூங்குமா 
                              

கருத்துகள்

  1. எண்ண ஓட்டம் இனிமையாக இருக்கிறது.
    பேச்சு நடையை Google மொழிபெயர்க்காது.
    நல்ல தமிழில் எழுதிப் பயன்பெறுங்கள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஐயா.. நல்ல தமிழ் அதிகாரத்தை மையமாக கொண்டுள்ளதோ என அஞ்சுகிறேன்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உன் தமிழ் பிறருக்கு வேண்டாம் என்றால் நான் என்ன செய்ய முடியும்

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

மாதவிடாய்

பொருள்