காதலாம் காதல்

 யாரும் காணாத என்னுடலை

நீ காண விரும்பியே 

என்னிடம் காதலனாய் நடிக்கிறாய்.. 


உண்மை அறிந்தும் நான்

ஏனோ உடலின்பத்தை 

அழிக்கும் நிறுவனமல்ல

பெண்ணுடல் என 

ஒவ்வொரு முறையும் நிரூபிக்க

நினைக்கிறேன்... 

நீ உன் எண்ணத்திலிருந்து 

மாறி என்னையும் சக உயிராக 

நினைப்பாய் என

 நம்பிக்கையில்லை. ....


 

உன்னை திருத்தி தான் நான்

வாழ வேண்டும் என்ற 

அவசியமுமில்லை..... 


காலப்போக்கில் என் பருமனான

உடலும் உன் ஆசைக்கு

இணங்கிய என்னுள்ளமும்

இறுகிப் போகக் கூடும்... 

அப்போது என் தசைகளால்

உனக்கு என்ன பயன்


ஆக போகிறது... 

உன்னை திருத்தி தான் நான்

வாழ வேண்டும் என்ற  எந்த

அவசியமுமில்லை..... 


மேலும் படிக்க

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள் புதிது

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

பேதா- கதை