கிளானியா

                                     கிளானியா எப்போதும் போல தன் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்கிறாள். அவளுக்கு பிடித்து செய்யும் வேலையே விவசாய வேலை தான் .

               அவளது தோட்டம் அவள் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் . தோட்டத்திற்கு போகும்போது தூரம் தெரிவதில்லை.... மீண்டும் வருகையில் அரை கிலோ மீட்டர் தூரம், இரண்டு கிலோமீட்டர் போல் மனம் விட்டு போகும் அளவிற்கு தூரம் ஆகிவிடுகிறது அவளுக்கு.. 
                 பெருவாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும் வழியை மடைமாற்றி தன் தோட்டத்திற்கு மாற்றிவிட்டு வயலினூடே வந்து , அடுத்தடுத்த பாத்திகளுக்கு இடையே உள்ள வாய்க்கால்களை சரிசெய்கிறது. 
                       முழுமையாக சரிசெய்தால் தண்ணீர் தானாகவே பாயும் என் நம்பி செய்தே இருக்கிறாள். 
    

                     வாய்க்கால் சீரமைப்பை முடித்து விட்டாள், அடுத்து அந்த பறவையாக மாற நினைக்கிறாள். அவள் தோட்டத்திற்கு கொஞ்சம் அருகில் தான் அவளது அண்ணனின் தோட்டம். அங்கு 3 மிதிவண்டிகள் எப்பொழுதும் நின்று கொண்டிருக்கும். எப்போது எல்லாம் தோட்டத்தில் யாரும் இல்லையோ, அப்போது அவள்தான் அம்மூன்று மிதிவண்டிகளின் பாதுகாப்பாளர். 

     யாரும் இல்லாத சமயத்தில் மிதிவண்டியை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். 
                            தண்ணீர் இன்னும் சிறிது நேரத்தில் தோட்டத்திற்கு பாய்ச்சி விடுவாள். பிறகு என்ன செய்வது என கடுமையாக யோசிக்கிறாள் கிளானியா. காட்டுப்பாதைகளில் சைக்கிளை எடுத்து மிதித்து   கொண்டிருக்கும் அவ்வேளையில்,  அப்பாவின் இருசக்கர வாகன சத்தம்,  உடனே சைக்கிளை முன் நின்று கொண்டிருந்த  இடத்தில்  நிறுத்தி விட்டு சட்டென்று தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்ச பயன்படுத்திய மண்வெட்டியை எடுத்து தன்னருகில் வைத்து மிகவும் சோர்வாக இருப்பது போல் உட்கார்ந்து கொண்டாள். 

                          அப்படி இருந்த பொழுது நேரடியாக கிளானியாவை நோக்கி இருசக்கர வாகனம் வருகிறது. இவள் எந்த சலனமும் முகத்தில் காட்ட வில்லை. ஏற்கனவே பழகியது தானே என இருக்கிறாள். 

                            அப்பா கிளானியாவை நோக்கி வா போகலாம், தண்ணீர் பாய்ச்சி முடித்து விட்டாயே, கால்வாயில் மீன் இருக்கும், பிடிக்கலாம் வா என்கிறார். சரியென்று இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் உட்கார்ந்து கொள்கிறாள். விரைந்து மீன் இருக்கும் இடத்தை நோக்கி செல்கின்றனர். 


                                மீன் பிடிக்கும் வாய்க்கால் வந்து விட்டது. வாய்க்காலில் இறங்கி மீனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் மூன்று பிரிவாக வாய்கால் பிரிந்து செல்கிறது. அப்பகுதியில் அவர்கள் ஒவ்வொரு பகுதியிலும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். 


                                   கிலானியாவின் கையில் நிறைய🐠கொளுத்தி மீன்கள் கிடைக்கின்றன. அப்பாவையும் அண்ணனையும் அழைக்கிறாள். 

                                    இங்கே வாருங்கள் இருவரும். இங்கு அதிகமாக மீன் உள்ளது. இது நமக்கு இன்று போதும் என அழைக்கிறாள். பிறகு மூவரும் சேர்ந்து மீன் பிடிக்கிறார்கள். முன்னம் அவன் அண்ணன் நின்று கொண்டிருந்த இடத்தில் ஒரு முதலை 🐊 மறைந்ததைப் பார்க்கிறாள் கிளானியா. 

                               அப்பொழுது அங்கு கண்டிப்பாக மீன் இருக்கும். ஆனால் தற்போது அப்பாவிடம் சொன்னால் அம்முதலையை அடித்துக் கொன்று விட்டு அம்மீன்களை 🎣பிடிப்பார் என அஞ்சுகிறாள். போகும் வரை எதுவும் பேசவில்லை அவள். மீன் 🐟🐠🐠 பிடித்து செல்லும் வரை அமைதியாக இருந்து விட்டு, அவ்விருவரையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு, மீண்டும் அவ்விடத்திற்கு வருகிறாள். 


                          அம்முதலை அங்கேயே நிற்கிறது. இவளின் செயலை பார்த்துக் கொண்டே இருக்கிறதா என கவனிக்கிறாள். ஆம் அப்படியே உள்ளது. அருகில் சென்று என்ன என்று பார்க்கிறாள் கிளானியா. வாய்காலில் அடித்து வரப்பட்ட முதலை பொம்மை அது. இதனை இரவில் அம்மா அப்பாவிடம் கூறி நகைக்கிறாள். அப்பொழுதும் அந்த சின்ன முதலை 🐊 பொம்மை அவளை பார்த்து கொண்டிருப்பது போலேயே தெரிகிறது....... 



 இவ்வாறு ஒன்றுமில்லாதவற்றை எண்ணியே நாம் வாழ்க்கையில் பயப்படுகிறோம். ... சற்று சிந்துப் பார்த்தாள் முதலை 🐊பொம்மையே அனைத்தும்...... 🙂
 


https://www.blogger.com/blog/post/edit/8551115888711672824/7323711525110505598

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள் புதிது

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

பேதா- கதை