நாளா பக்கமும் அவளது குரலை ஒலிக்கத் தான் ஆசை...

                    நாளா பக்கமும் அவளது குரலை ஒலிக்கத் தான் ஆசை...   

  பண்பாடு, கலாசாரம், மதம், இனம், நிறம், காண்பனவெல்லாம் அவளை அடிமைப்படுத்துகிறது.. 


                         சுதந்திரம், போராடும் குணம், விடுதலை தாகம், தோழமை, சமத்துவமென இன்னொன்று அவளை எழச் சொல்லிப் போராடுகிறது..... 


                           பெண்ணாய் இருக்கிறாய் அடிமையாய் இரு.. அல்லது போராடு என்பதே இவ்வுலகம் அவளுக்கு தரும் அன்பு பரிசு.. 


                       அவள் அடிமையாய் வாழ்ந்தால் சாவதும் அல்லது சாகடிக்கப்படுவதும் பிறர் கையில்... 


                    போராடினால் சாவாவது அவளது கையில் மிஞ்சும்   ...                                எக்காலத்தில்... அவள் சாவிலும் போராட்டக்குணத்தைக் காண்பிக்க வேண்டியுள்ள நிலை  மாறுமோ.. 


                 யாரை குறைக்கூறுவது, யாரை துணைக்கு கொள்வது, யாரை பழிவாங்குவது. யாரை மன்னிபதென அவளுக்கு தெரியவில்லை.. 


                   ஆனாலும் அவளது எழுச்சி மிகுந்த கண்களும், விடுதலைக்கான சிந்தனையும் ஓயவில்லை... 


அவள் மரணம் அவளது உடலில் இல்லையென்பதை மட்டும் நிரூபித்து மீண்டும் மீண்டும்  இவ்வுலக போராட்டாத்தினுள் வைரம் பாய்கிறாள்..... 


மேலும் படிக்க. 

https://kasthurigai.blogspot.com/2023/11/blog-post.html

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அவள் புதிது

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

பேதா- கதை