மருமணம்- மறுமனம்
https://kasthurigai.blogspot.com/2023/05/blog-post_4.html
அன்று புதன்கிழமை முதல் மணம் தவறியதால் இரண்டாம் மணத்திற்கு நாள் குறித்து வளையல் போடும் தினம் .
இதில் எது திருமணம் என பெண்ணுக்கு ஒரே யோசனை. முதல் திருமணத்தில் நடந்த நிகழ்வுகளும், அதனால் மனதில் பதிந்தவையும் என்றும் அவள் நினைவில்..... வளையல் போடுவதில் பெண்ணிற்கு இருக்கும் சந்தோஷத்தை விட அவளுடன் சென்ற உறவினர்களுக்கும் ஊர்காரர்களுக்கும் தான் ஒரே குதூகலம். வாகனத்தில் பெண்ணும், பெண்ணுடன் செல்பவர்களும் ... முன் மணத்தில் அவள் கணவனுடன் வாழ்ந்த வாழ்வைப் பற்றி பேசவில்லை என்றாலும் மனதில் நினைத்திருக்கக் கூடும் . அவர்களிடம், சிறிய சிறிய மௌனங்கள் மணப்பெண் மனதை பின்னுக்கு தள்ளியது . மணப்பெண் முதல் மௌனத்திலேயே ஆழ்ந்த மௌனத்தை தழுவிக் கொண்டாள். அவளின் மௌனமோ அவளும் அவனும் உடன் வாழ்ந்த வாழ்வை நினைத்தது. அவளின் கணவன் அவளை அவ்வளவு நிறைவாக வைத்து வாழ்ந்தவன். அவளுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் வரை குழந்தை பேறு இல்லாததால் அவளுக்கோ ஒரே துன்ப வாழ்வு .
இதனைப் பற்றிய எந்த சிந்தனையும் அவருடைய கணவனுக்கு இல்லை. அவன் குழந்தையை பற்றி ஒரு கேள்வியும் அவளிடம் கேட்டது இல்லை. அவன் அவளின் இன்பத்தையும் நிம்மதியையும் மட்டுமே விரும்பினான் .
பல மருத்துவ பரிசோதனைக்கு பின் அவளுக்கு குழந்தை பேறு என்பதே இல்லை என உறுதிப்படுத்தப்பட்டது .. தன்னால் தன்னுடைய கணவனுக்கு வம்சத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை என்று நினைத்து அவளுடைய கணவனுக்கு இரண்டாம் திருமணம் செய்ய முடிவெடுத்தாள்.
அதற்காக அவளின் கணவனையும் ஒத்துக் கொள்ள வைக்க மிகவும் சிரமப்பட்டு எப்படியோ ஒத்துக் கொள்ள வைத்தாள். பெண்ணையும் பார்த்து திருமணம் செய்து வைத்தாள்.
காலப்போக்கில் இரண்டாவதாக திருமணம் செய்த பெண்ணுக்கு இவள் இருப்பது பிடிக்கவில்லை ...
அதனால் அவளின் கணவனை விட்டு விலகிக் கொள்ள முடிவெடுத்தாள். அதற்காக தன்னுடைய அம்மாவின் உடல் நிலையை காரணம் காட்டி தன்னுடைய பிறந்த வீட்டிலேயே இருக்க வழி வகுத்துக் கொண்டாள். அவ்வப்போது அவளின் கணவன் அவளை காண வருவான். எப்படியோ வருடங்கள் பல கடந்தன. அவளின் கணவனுக்கு இவளது செயல் பிடிக்கவில்லை, ஆனாலும் அவளின் சொல்லை தட்டாமலே வாழ்கிறான்.
அவன் நிம்மதியை நாடுகிறான். அவளின் நிலைக்கு தான் காரணமாக அமைந்துவிட்டதை எண்ணி மது அருந்தும் பழக்கத்திற்கு ஆளாகிறான் . அவளை பார்க்க வரும் நாளை தவிர மற்ற நாட்கள் அவனுக்கு மது உடனே கழிந்தன. தொடர் மது பழக்கத்தினால் அவனின் இறப்புக்கு மது வழி வகுத்து விட்டது. அவளின் முதல் அத்தியாயம் முடிந்தது.
அவளது முதல் கணவன் இறந்த பிறகு தன்னுடைய வேதனையினை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மீண்டும் அவளின் கொடுமையான வாழ்க்கை தொடர்கிறாள். அவள் மீண்டும் ஒரு திருமண வாழ்க்கையை எண்ணுவதே இல்லை.
இரண்டு வருடம் முடிந்த பிறகு மீண்டும் அவளுக்கு ஒரு செய்தி...... அது மறுமண செய்தி
தன்னுடைய அண்ணன் மற்றும் அம்மா தூண்டுதலால் அம்மணத்திற்கு சம்மதித்து கொண்டாள்.
ஆனால் அவள் மனம் அவனுடனே....
புதிய மனம் பழையனவற்றை நினைவுபடுத்த தான் செய்கிறது ,இருப்பினும் புதியவற்றை நாடி செல்ல உறவுகள் விரும்புகின்றன . தன்னால் யாருக்கும் எந்த துன்பமும் ஏற்படக்கூடாது என்ற எண்ணமே, அவளை மறுமணத்திற்கு ஒத்துக் கொள்ள செய்தது ..
திருமணம் வியாழன் நடைபெறுகிறது. அவளின் கடந்த கால நினைவுகளை அழிக்க உதவும் என நம்பவில்லை.. ஆனால் கடந்த காலமாக என்ன தோன்றினாலே போதும் .
இரண்டாவது மணம் தற்போதைய நிலையை மாற்ற உதவும் இல்லை என்றாலும் அவளுக்கு ஓர் ஆறுதலாய் அமையும்.... என்ற எண்ணமும் உண்டு எல்லோரிடமும்....
உடலைப் பேணத் திருமணம்
பதிலளிநீக்குஉள்ளத்தில் நினைவலைகள்
நல்ல கதை
பண்புள்ள கதை
பாராட்டி மகிழ்கிறேன்.
நனிநன்றி.
பதிலளிநீக்கு