வாழ்வின்றிப் போரின் உதிரம்தானே வலிய நுண்ணிய வலியினைக் கொண்டுதானே உன் வாழ்வின் பெரும் கீறலான வெட்டென மாதந்தோறும் நடக்கும் மாநிலத்தில் ஓர் உண்ணவியலா உணர்ச்சியதுவே... உண்ணவியலா இறைச்சியதுவே.. உண்ணும் பழக்கப் பிறப்பதுவே... துக்கமில்லா வீட்டில் வீரியம் கொண்ட பேரழுகைச் சத்தம் ஒன்று.. நாதியற்று கிடந்து, தனது மூன்று, ஐந்தென நாட்களைக் கழிக்கிறது..
இயலாது என்று இங்கொன்றுமில்லை. ஆனால் உருப்படியானது என்று இங்கெதுமில்லை. கடுங்குளிறோ.. வாடைக்காற்றோ.. கடலிடமிருந்து வந்தால் அது காதல் பரிசல்லவோ.. இரவெல்லாம் பெரும் தனிமையில் உன்னோடு(கடல்) நானும்.. என் உயிர்கலந்த உன் காற்றும்.. போதவில்லை.. சில நாழியாவது உன்னுள் ஊடுருவ சொல்கிறது.. என் கண்கள்..
நானாக அப்பொருளைத் தேடிக்கொள்ளவில்லை... அதற்காக ஆசையும் படவில்லை.. எவ்விதத் தொடர்புமே இல்லை எனக்கும் அப்பொருளுக்கும்.. தானாக வந்தது.. உன்னுடனே இருப்பேன்.. பாதியில்.. இது நிரந்தரமல்லாத வன்முறையான வாழ்க்கை. நாம் பிரிவோம் என்றது.. நானே வலுக்கட்டாயமாக பிடித்திலுத்தேன்... உடையும் நிலையில்.. நானே அதனைக் கொண்டு சென்றேன்.. விட்டுவிட்டேன்... மீளவில்லை.. மீளாது மீண்டாலும் என் மனம் அப்பொருளோடு வாழாது..
கருத்து நல்லா இருக்கு இதைப்பற்றி இன்னும் விரிவான விளக்கங்கள் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
பதிலளிநீக்குவிவரிவாக பேச இயலாது. என் கற்பனை அவ்வளவே.
பதிலளிநீக்கு