இடுகைகள்

இல்லாத காலங்கள்

எதிர்காலத்திலேயே நம்முடைய சிந்தனை எல்லாம்...  ஆம் தானே..  நாளை என்று தானே அத்தனையும் விடுகிறோம்..  நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை செய்துக் கொள்ளலாம்..,  எல்லாம் நாளைச் சரியாகிவிடும்..  இது போன்ற எண்ணங்களுக்கு இன்று என்பது அடித்தளம் ஆகிறது..  என்பதையே மறந்து நாளை என்றொரு கண்ணாடி வீட்டினைக்கட்டிக் கொண்டிருக்கிறோம்..  இல்லை.. என்றால் இருக்கவே செய்கிறான் இறைவன் என்று இல்லாத ஒருவனிடம் பழியைப் போட்டுவிடுவது..  விதி, நேரம், என்ற படர்கை காரணங்களால் பரிசுத்தமான நம்மை அவ்வினையில் இருந்து விளக்கிக் கொள்வது..  இவ்வுலகில் நாம் தானே ஆதிக்கம் நிறைந்தவர்களாக உள்ளோம்..  எல்லாவற்றுக்கும் நாம் தானே காரணம் என்பதையும் ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்..  அழிப்பதில் முதன்மை நாம்.. விலகுவதிலும் முதன்மையே..  ஆக்குவதிலும் அவ்வாறு இருப்போம்... ஆக்கம் நிறைந்தவர்களாக மாற்றம் கொள்வோம்..  நல்லதொரு மாற்றத்தினை உண்டு பண்ணுவோம்..  சமதர்மத்துடன் வாழும் மாற்றத்தினை பெறுவோம்..  புதிய சிந்தனை, செயல்பாடு போன்றவை தோன்றட்டுமே... 

சொல்வது அவள்

இவ்வுலகத்தின் அழிவும் ஆக்கமும் எழுத்தில் உள்ளது...  அவரவர் எண்ணத்திலும் கூட...  தூய சிந்தனையும், முற்போக்கான எழுத்துமே சமத்துவமான சுந்திரத்திற்கான வழி...  அறநூல்களை கற்பதும்... நல்வழியில் நடப்பது போன்ற பாவனை செய்வுதும் ஆகாது...  அனைத்தையும் படித்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நடிப்பதையும் தொடக்கம் செய்கிறோம்...  சரியாக நடக்க விரும்பும் போதெல்லாம் இந்த வயதில் இப்படி தான் தோன்றும், காலம் கடந்தால் நீயும் வாழ்க்கையைத் தேடி ஓடி விடுவாயென நம்மை பின்னுக்கே இழுக்க முயற்சிக்கும்.. மனிதர்கள் வாழ்க்கை என்பதற்கு பல விளக்கங்களை வயதிற்கு ஏற்றாற்போல் அமைத்துக் கொள்கிறது இச்சமூகம்...  நல்லதை செய்யெனவும், பிறருக்கு உதவெனவும், குடும்பத்தைப் பாரெனவும், பிறருக்கு தெந்தரரவு செய்யாமலிருந்தால் போதுமெனவும் இன்னும் பல. நேரத்திற்கும்  இடத்திற்கும் ஏற்றது போலமையும்... இவ்வாழ்கைக்கான விளக்கங்கள்...  என்னவோ உன்உயிரின் சுவாசத்தை உணர்.. பின் அனைவரின் சுவாசத்தையும் கவனி.. எல்லாம் வெவ்வேறு விதம்... அதனதன் போக்கில் சுதந்திரமாக இருந்தால் போதுமென நினை..  சுவாசத்தில் நஞ்சு இருப்பின்( அ) சேர்ப்பின்  அதனை நீக்குவதும் நம் க

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

 அவள் மீது இவ்வுலகிற்கு அச்சம்..  ஆதலால்  தான் அவளை பல வகையான கட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறது...  அவளை சித்தரவதைச் செய்தும் இவ்வுலகத்திற்கு மனம் அசையவில்லை..  அவள் மூலமாக அவளையே கொடுமை செய்கிறது இவ்வுலகம்... காலத்தின் பிடியிலும் இவ்வுலகத்தின் பிடியிலும் சிக்கித் தவிக்கிறாள்.. அவள் தன்னை மீட்டெடுக்க நினைக்கும் போதெல்லாம் அவளைக் கடவுளெனவும், பூமி போன்றவளெனவும், சில பண்புகளை அவளுக்கேயுரியதென கூறி மடைமாற்றம் செய்கிறதிவ்வுலகம்...  அவளும் என்ன செய்வாள்.. மாற்றத்திற்கான வழிகளை தேடுவதைத் தவிர..  இவ்வுலகில் உள்ள அனைத்தும் வியக்கக் கூடிய ஆச்சரியங்களைக் கொண்டவை..  அவளும் அவள் போன்றோரும் இதில் இல்லையென சொல்வதற்கு இவ்வுலகம் முயற்சிக்கிறது..  பிறரைப் பார்த்து முடிவெடுக்கும் கண்களை அவள் பிடிங்கி எறிகிறாள்..  பிறரின் நலன் விரும்பியாக இருப்பதில் அவளுக்கு மகிழ்வு தான்..  ஆனால்,  அவள் தனக்காகவும் வாழட்டுமே..  அவள் முடிவுகளில் அவளிருக்கட்டுமே..  அவள் தனக்காகவும் கனவு காணட்டுமே...  அப்பொழுது தான் மற்றவர்களுக்கான இவ்வுலகத்திற்காக எத்தனை விதமான இழப்புகளை ஏற்றிருக்கிறாளென தெரியும்..  அவளுக்கான அவள் சிந்தனையி

அவளின் மொழிகள்

அன்பென்பதும், பாசமென்பதும், காமமென்பதும் வேறும் உணர்வு தான்...  அடடா! அவள் இவ்வுலகைப் புரிந்து விட்டாள் போலும்..  இதில் என்ன வியப்பென்றால் என்னை அவள் வழி நடத்த சிறிதும் விரும்ப வில்லை.. அவள் போல் மாற என்னை கட்டாயப்படுத்த வில்லை..  அது தான் அவள்.. என்றாள்  என்னிடம்..  உனக்கு புரியும் போது நீ தனித்த சுதந்திரத்தைக் காண்பாய்...  அச்சுதந்திரம் உனக்கு நிம்மதியையும், உழைக்கும் நம்பிக்கையையும் தரும்...  என்னை விட இவ்வுலகத்தை வேறு விதமாக  நீ ரசிக்கலாம்..  என்பதே அவள் எனக்கு  தந்த உபதேசங்கள்...  எனக்காச்சரியம்..  அவள் எவ்வளவு தீர்க்கமாய் பேசுகிறாள்.. அவள் முன்னாளில் இருந்ததை விட நிம்மதியாய் அலைந்து திரிகிறாள்..  யாரும் அவள் முதுகில் இல்லை..  அவளும் யார் முதுகிலுமில்லை...  அவளுடைய  சுகதுக்கங்களை அவளே பார்த்துக் கொள்கிறாள்... யாருடைய வழி நடத்தையலையும் எதிர்பார்க்க வில்லையவள்....  இத்தனையும் இப்போது உணர்ந்து கொண்டே ஒரு புன்சிரிப்பு.. என்னிதழில்.. 🙂 இந்த காலங்கள் எவ்வளவு கற்றுக் கொடுத்துள்ளது.. விளைவுகளை மட்டும் நினைத்து வாடின மனது..  இப்போது செயல்களையும் உன்னிப்பாகக் கவனிக்கிறது..  பரந்து விரிந்த

விவரி உன்னியல்பை

                   அந்தச் சிட்டுக்கு சிறகு உள்ளது..                    உங்களுக்கு கால்கள் மட்டுமே ஏன் தெரிகிறது.                      அதற்கு பறக்கவும் தெரியும்.. அது பறந்து தான் பார்க்கட்டுமே..                     அது பறப்பதால் உங்களது வரலாறு குலையப் போவதில்லை.. ஆகமங்களும் சடங்குகளும் அதோடு நின்று விட போவதில்லை...  பிறகேன் அப்பறவையின் சிறகுகளை வரலாறு , ஆகமங்கள், சடங்குகளைக் கொண்டு துடிதுடிக்க வெட்டுவதும் ஒடித்துடுவதுமான செயல்களைச் செய்கிறீர்..  அச்சிட்டை விடுவியுங்கள்.. ஏன்? அப்பறவையை பயம் கொள்ளச் செய்கிறீர்..  அன்பென்றும், பாசமென்றும் நாடகமாடுகிறீர்..  அது பறவை பறக்கட்டும்.. அதற்கான கூட்டை அதுவே கட்டி கொள்ளட்டும்..  அச்சிட்டை விடுவியுங்கள்

அவள் புதிது

https://kasthurigai.blogspot.com/ அவள் ஏனோ அங்கு நின்றுக் கொண்டிருக்கிறாள் அவள் ஏனோ அங்கு நின்றுக் கொண்டிருக்கிறாள் உலகெங்கும் அவள் மீதான கேள்வி அது அவள் நினைவில் இந்நாள் எனக்கு பிடித்தவாறு கடந்து விட்டது என்று சந்தோசம்...  உலகக்கேள்விகளை அவள் கண்முன் கொண்டு வருவதில்லை..    ஏனென்றால் அக்கேள்விகளில் அவளில்லை.. இவ்வுலகமாக அவர்களே உள்ளார்கள் அக்கேள்வியில்...  அவள்போல் வாழ இவ்வுலகிற்கு ஆசை தான்..  சடங்காய் போன விமர்சனங்களைக் கண்டு நின்று தவித்துக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்...  அவளுக்கு ஒவ்வொரு நாளும் புதுமையான அனுபவங்கள், மகிழ்வுகள் வந்து சேர்கின்றன..  இவ்வுலகின் கனவுகள் கட்டமைக்கப்பட்டு கட்டுண்டுக் கிடக்கையில்..  அவளது கனவுகள் வானில் சிறகை விரிகின்றன...  அவள் சிறகு பாதிப்படையத்தான் செய்கிறது..  சரி செய்ய கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் மகிழ்கிறாள்.... 🙂

நாளா பக்கமும் அவளது குரலை ஒலிக்கத் தான் ஆசை...

படம்
                    நாளா பக்கமும் அவளது குரலை ஒலிக்கத் தான் ஆசை...      பண்பாடு, கலாசாரம், மதம், இனம், நிறம், காண்பனவெல்லாம் அவளை அடிமைப்படுத்துகிறது..                           சுதந்திரம், போராடும் குணம், விடுதலை தாகம், தோழமை, சமத்துவமென இன்னொன்று அவளை எழச் சொல்லிப் போராடுகிறது.....                             பெண்ணாய் இருக்கிறாய் அடிமையாய் இரு.. அல்லது போராடு என்பதே இவ்வுலகம் அவளுக்கு தரும் அன்பு பரிசு..                         அவள் அடிமையாய் வாழ்ந்தால் சாவதும் அல்லது சாகடிக்கப்படுவதும் பிறர் கையில்...                      போராடினால் சாவாவது அவளது கையில் மிஞ்சும்   ...                                எக்காலத்தில்... அவள் சாவிலும் போராட்டக்குணத்தைக் காண்பிக்க வேண்டியுள்ள நிலை  மாறுமோ..                   யாரை குறைக்கூறுவது, யாரை துணைக்கு கொள்வது, யாரை பழிவாங்குவது. யாரை மன்னிபதென அவளுக்கு தெரியவில்லை..                     ஆனாலும் அவளது எழுச்சி மிகுந்த கண்களும், விடுதலைக்கான சிந்தனையும் ஓயவில்லை...  அவள் மரணம் அவளது உடலில் இல்லையென்பதை மட்டும் நிரூபித்து மீண்டும் மீண

கிளானியா

படம்
                                      கிளானியா எப்போதும் போல தன் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்கிறாள். அவளுக்கு பிடித்து செய்யும் வேலையே விவசாய வேலை தான் .                அவளது தோட்டம் அவள் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் . தோட்டத்திற்கு போகும்போது தூரம் தெரிவதில்லை.... மீண்டும் வருகையில் அரை கிலோ மீட்டர் தூரம், இரண்டு கிலோமீட்டர் போல் மனம் விட்டு போகும் அளவிற்கு தூரம் ஆகிவிடுகிறது அவளுக்கு..                   பெருவாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும் வழியை மடைமாற்றி தன் தோட்டத்திற்கு மாற்றிவிட்டு வயலினூடே வந்து , அடுத்தடுத்த பாத்திகளுக்கு இடையே உள்ள வாய்க்கால்களை சரிசெய்கிறது.                         முழுமையாக சரிசெய்தால் தண்ணீர் தானாகவே பாயும் என் நம்பி செய்தே இருக்கிறாள்.                            வாய்க்கால் சீரமைப்பை முடித்து விட்டாள், அடுத்து அந்த பறவையாக மாற நினைக்கிறாள். அவள் தோட்டத்திற்கு கொஞ்சம் அருகில் தான் அவளது அண்ணனின் தோட்டம். அங்கு 3 மிதிவண்டிகள் எப்பொழுதும் நின்று கொண்டிருக்கும். எப்போது எல்லாம் தோட்டத்தில் யாரும் இல்லையோ, அப்போது அவள்தான் அம்மூன

இயல்பு

படம்
இயல்பு எல்லாமே... இயல்பு சரியோ தவறோ எல்லாமே.... இயல்பு தவற்றைத் திருத்திக் கொள்..  சரியை நடைமுறைப் படுத்திக் கொள்...  இதில் சரி என்பதென்ன தவறு என்பதென்ன என்பதைத் தெரிந்து கொள்..  இயல்பு

என்னோடு நான்

படம்
என்னோடு யாரையும் எதிலும் வேகு தூரம் அழைத்துச் சென்றது இல்லை.. அழைத்துச் செல்வதிலும் எனக்கு ஆசையில்லை...  யாருடைய கனவிலும் நானிருக்கக் கூடாது என்பதே என் ஆசை....  என் கனவுகளிலும் அப்படியே.....  நான் மட்டுமே......  அவரவருக்கு விருப்பு வெறுப்பு உள்ளது...  எதனையும் நான் கண்டு கொள்வதும் இல்லை...  எந்த காரணமும் இன்றி வாழ்ந்தால் போதும் யாரும் யாரையும் அடிமைப்படுத்த தேவையில்லை.... 

காதலாம் காதல்

படம்
 யாரும் காணாத என்னுடலை நீ காண விரும்பியே  என்னிடம் காதலனாய் நடிக்கிறாய்..  உண்மை அறிந்தும் நான் ஏனோ உடலின்பத்தை  அழிக்கும் நிறுவனமல்ல பெண்ணுடல் என  ஒவ்வொரு முறையும் நிரூபிக்க நினைக்கிறேன்...  நீ உன் எண்ணத்திலிருந்து  மாறி என்னையும் சக உயிராக  நினைப்பாய் என நம்பிக்கையில்லை. ....   உன்னை திருத்தி தான் நான் வாழ வேண்டும் என்ற  அவசியமுமில்லை.....  காலப்போக்கில் என் பருமனான உடலும் உன் ஆசைக்கு இணங்கிய என்னுள்ளமும் இறுகிப் போகக் கூடும்...  அப்போது என் தசைகளால் உனக்கு என்ன பயன் ஆக போகிறது...  உன்னை திருத்தி தான் நான் வாழ வேண்டும் என்ற  எந்த அவசியமுமில்லை.....  மேலும் படிக்க

Nature's beauty

படம்
In forests deep, where shadows dance, Amidst the trees, a wild romance. The rustling leaves, a whispered song, Nature's beauty, pure and strong. Beneath the sky's vast, azure dome, Majestic mountains call us home. Their peaks reach high, to touch the stars, A world of wonder, near and far. Beside a river's gentle flow, Time slows down, as waters go. The babbling brook, a soothing sound, In nature's peace, we are truly found. In meadows green, where flowers bloom, Life's vibrant colors chase the gloom. The buzzing bees and butterflies, Paint the world with nature's eyes. As day turns into starry night, The heavens fill with twinkling light. A canvas vast, a cosmic show, In awe, we watch the galaxies glow. Nature's symphony, a gift so grand, In every tree and grain of sand. Let's cherish it with all our might, For in its beauty, we find our light. So, let us tread with gentle care, And breathe in the earth's fragrant air. For nature's w

மாபெரும் தமிழ் கனவு

தலைப்போ     மாபெரும் தமிழ் கனவு பேச்சாளரோ பேசியதெல்லாம் .....  கனவுகளைத் தவிர்த்து,  விதிமுறை   என்று எதையெல்லாம் கூறினார்களோ ..  அதைவிடுத்துப் பேசிச் சென்றனர்.  இதை அறிந்தோர் சிரித்து கடந்தனர் அறியாதோர் குழப்பத்துடன் அவ்விடத்தைக் கடந்தனர்..  இவ்வாய்பைப் பயன்படுத்திக் கொண்டோரும் அதில் சிலர்...  இறுதியாக தலைப்பைத் தாங்கிக் கொண்டிருந்த வள்ளுவ அட்டைப்படமோ எதையோ எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறது.. யாராவது முழுவதுமாக இத்தலைப்பை பேசிச் சொல்வார்களென...  http://kasthurigai.blogspot.com/2023/05/blog-post_16.h https://kasthurigai.blogspot.com/2023/07/blog-post.html

மருமணம்- மறுமனம்

படம்
https://kasthurigai.blogspot.com/2023/05/blog-post_4.html                                       அன்று புதன்கிழமை முதல் மணம் தவறியதால் இரண்டாம் மணத்திற்கு நாள் குறித்து வளையல் போடும் தினம் .                        இதில் எது திருமணம் என பெண்ணுக்கு ஒரே யோசனை.  முதல் திருமணத்தில் நடந்த நிகழ்வுகளும், அதனால் மனதில் பதிந்தவையும் என்றும் அவள் நினைவில்.....                                      வளையல் போடுவதில் பெண்ணிற்கு இருக்கும் சந்தோஷத்தை விட அவளுடன் சென்ற உறவினர்களுக்கும் ஊர்காரர்களுக்கும் தான் ஒரே குதூகலம்.                        வாகனத்தில் பெண்ணும், பெண்ணுடன் செல்பவர்களும் ...                            முன் மணத்தில் அவள் கணவனுடன் வாழ்ந்த வாழ்வைப் பற்றி பேசவில்லை என்றாலும் மனதில் நினைத்திருக்கக் கூடும் .  அவர்களிடம், சிறிய சிறிய மௌனங்கள் மணப்பெண் மனதை பின்னுக்கு தள்ளியது .  மணப்பெண் முதல் மௌனத்திலேயே ஆழ்ந்த மௌனத்தை தழுவிக் கொண்டாள்.                        அவளின் மௌனமோ அவளும் அவனும் உடன் வாழ்ந்த வாழ்வை நினைத்தது.        அவளின் கணவன் அவளை அவ்வளவு நிறைவாக வைத்து வாழ்ந்தவன்.     

மும்தாஜின் கல்லறை

படம்
மும்தாஜின் சாபம்- தாஜ்மஹால் சபித்தவர் தான் ஷாஜகான்...                       உலக அதிசயமாம் தாஜ்மஹால் இது  போலி வரலாறு.. துக்கம் -1                     மும்தாஜ் இறந்த பிறகு ஷாஜகானின் துக்கம் எவ்வாறு அமைந்தது என்பதை பின்வருமாறு காணலாம். மும்தாஜ் இறந்த பிறகு துக்கத்தை துடைப்பதற்காக ஹராம் என்ற அந்தப்புறத்தில் மூன்று நாள் ஒரே கிளுகிளுப்பு. ..காதல் மன்னன் ஷாஜகான்..                           14வது குழந்தை பிரசவத்தின் போது தான் மும்தாஜ் இறந்தார். தொடர் பிள்ளை பேறு காரணமாக ,மும்தாஜ் உடல் நல குறைபாட்டால் உயிரிழந்தார் என்பது செய்தி.  துக்கம் -2                மும்தாஜ் இறந்த பிறகு தன் துக்கத்தின் காரணமாக ஷாஜகான் செய்தது மும்தாஜின் சகோதரியை திருமணம் செய்தது தான் ...               தன் சொந்த மகளையும் அவர் விட்டுவிடவில்லை .               (தான் பெற்ற மகளையே திருமணம் செய்து கொண்டு அதற்கு ஷாஜகான் கூறும் சொல்லாடல்..               தான் விதைத்த மரத்தின் கனியை தானே சுவைப்பதில் மாபெரும் தவறு என்று கேட்ட சீர்திருத்தவாதி ... )  தாஜ்மஹால் ஒரு தீராத சாபம் என்பதற்கான, அடுத்து ஒ

மந்தை ஆடுகள்

படம்
மந்தை ஆடுகள்

தவறினால் தவறு

தவறாக இருப்பினும் சிறிதும் அதனின்று தவறாதே...  தவறில் உண்மை இருப்பின் தவறினால்  தவறிக் கொண்டே இருக்க வேண்டியது தான்                        - சிவனி மேலும் எனது எழுத்துக்களை படிக்க விரும்பினால்.. கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி கொள்க மந்தை ஆடுகள் பெண் ஆம்

பெண் ஆம்...

படம்
                   பெண் நாணம்                                 தன்மை இழந்து                      தரம் கொண்டு போன                          சுரமஞ்சரி......                    கேட்கப் போனால்                          அச்சமாம்... நாணமாம்....                      கர்மம் என்றால்                          கர்மமோ?                          கருமம் என்ன                             கருமமோ?                                                               காதலால் தன்னை                       மறந்திழந்தால்....                       ஏக்க உணர்விற்கு                        உரியவள்..                         ஏக்கத்தை ஏந்தியபடி                          வாழ்ந்து                          துறவியாகி                       போனாள் ..                        தன்                        நிலை                        மறந்ததால்.....               பெண்ணுக்கு               வதைப்பது பிடிக்கும்...               ஏனெனில்  வதைக்கப்                பட்டதால் வதைத்து வதைவாளோ? அல்லது வதைத்து மகிழ்வாளோ ?   

தரம்

படம்
தன்னம்பிக்கை ஆயிரம் முறை தோற்றினும்  அலுத்து விடாத மனம் எதுவோ அதுவே வெற்றியை  அடையும்  கணையாக செயல்படுகிறது.  தாழ்த்தும் மனங்கள் இவ்வுலகில் அதிகம் தான் ஆம்.......  தாழ்த்தும் மனங்கள் இவ்வுலகில் அதிகம் தான் நீ அவைகளை வீழ்த்துவதற்கு தயாராக இரு....  சில அவமானங்கள் நாம் எதிர்பார்த்தே .. நடக்கிறது அதே போல் சில  உதாசினங்களும்...  சில துன்பங்களுக்காக பலப்பல இன்பங்களை  இழக்கிறோம் நாம்....  நடப்பது நடக்கட்டும்...  எதுவாயினும் நீங்கள் நிகழ்த்த நினைப்பதை  நடத்துங்கள்...  துன்பங்களை கண்டு துயன்றோமானால்.....  இறுதி வரை துயரத்தை மட்டுமே படுவோம்....  எதையும் கண்டு கொள்ளாமல் இருக்க பழகுங்கள்...  எதுவாயினும் எட்டி போகும் வரை.. . ..  மீண்டும் மீண்டும் வரின் அழிக்க தயார் செய்யுங்கள் உங்களை.... நீங்களாகவே.....  இல்லை அழிய தயார் ஆகுங்கள்....  வலியது பிழைக்கும்...  எல்லாம் நிகழும் ஓர் நாள்...  எள் அளவும் தளரதே....  தினமும் உன்னை புதியதோர் நிலத்தில் உற்பத்தி செய்...  புதிய  புதிய வளம்...  உன்னை புதுப்பிக்க உதவும்....  ஏனெனில் பழமையை இவ்வுலகம் போற்றியே பாழ் படுத்தும்..  புதியதாக உரு கொ

மூக்குவாழி ( ஆண்கள் அணியும் மூக்குத்தி)

படம்
                          மூக்கு குத்துவது என்பது பெண்களுக்கான ஒன்று.                                                   இச்செய்தி அனைவருக்கும் தெரிந்த கண்கூடாக பார்க்கும் ஒன்று தான்.                            காது குத்துவது என்பது ஆண் பெண் இருவருக்கும் பொதுவான ஒன்று. இதுவும் நாம் அறிந்ததே.....                                                    ஆனால் ஆண்களுக்கும் மூக்கு குத்துவர் என்ற செய்தி சிலருக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.                         தமிழ்நாட்டில் இன்றளவும் குறிப்பிட்ட சமூக மக்கள் இதனை பின்பற்றுகின்றனர்.                       இதற்கு காரணம் அச்சமுக மக்களின் சில நம்பிக்கைகளே.  இதனை விசித்திர வழக்கம் என்று எல்லாம் கூறிவிட முடியாது நாம் அறியாத ஒன்று அவ்வளவுதான் . பாட்டன் பெயரை மறக்கும் சமூகம் தானே இது.....சில நம்பிக்கைகளை மறப்பதில் தவறு ஏதுமில்லை மூக்கு வாழி போடுவதற்கான காரணம்                            ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் குழந்தை மூக்கு வாழி அணிந்து இருக்கிறது என்றால்,                            அக்குழந்தைக்கு முன்னம் பிறந்த பெண் குழந்தையோ அல்லது ஆண் குழந்தையோ திடீர்