இடுகைகள்

மோட்சம்

எந்த வித சுகாதார ஒழுங்கிற்கும், பொது ஒழுங்கிற்கும் பொருந்தாதவையே மோட்சம் பெறுவதற்கான வழி ஆகும்....                                                       _ சிவனி இப்பாலித்தினருக்குள் எத்தனை பிணக்குகள்.. எதனைச் சொல்ல வேண்டும்? எப்படிச் சொல்ல வேண்டும்? எவரிடம் இதனை இத்தனை அழகாய் சொல்வது? அவர்களின் கண்கள் என்னை எப்படி எல்லாம் ஆய்வு செய்யும்? இம்மாதிரியான பல அர்த்தமுள்ள கேள்விகளுக்கு விடை எழுதியே ஓய்ந்து போகின்றன. என் வார இறுதி நாட்கள்.... என்ன இது இத்தனை பதட்டங்கள்...  எதிலும் நான் ஆசை கொண்டு உள்நுழையவில்லையே... நான் வருகையை மதிப்பளிக்க மட்டுமே இருக்கிறேன் அப்படியிருந்தும் எனக்கு ஏன் இழப்பு குறித்தான இவ்வளவு பதட்டங்கள்....

பாலின விடுதலை

 எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கவே இவ்வுலகம்.  முன்னோர்கள் சிலரின் வேண்டுதல்களில் கூட “எல்லாரும் கைக் கால் சுகத்தோட நல்லா இருக்கணும்” என்ற பொதுநலமான வேண்டுதல்களைக் கண்டு கேட்டிருக்கலாம். ஆனால் இவ்வாறான எண்ணங்கள் இப்போது பாம்புகள் மேல்சட்டை உரிப்பது போன்று உள்ளது. எல்லோர்க்குள்ளும் பாலின அடிப்படையிலான ஒடுக்குமுறை எண்ணங்களே புகுத்தப்பட்டுள்ளன. குறிப்பாகப் பல்வேறு பாலின வகைகளை இப்போது அறிமுகப்படுத்தும் நிலையில் தான் இன்று உலகமும் உள்ளது. அவர் யார்? நான் யார்? என்ற பார்வைகளில் வெளிப்படையாக ஒளிந்திருக்கும் அதிகார குணமிக்க உயிர்கள். பாலற்ற இனங்களாக வாழ்வதிலேயே மகிழ்வு என நினைக்கிறேன். ஒவ்வொரு உயிரும் ஒன்றை ஒன்று சார்ந்திருப்பதற்கும், ஒடுக்கி இருப்பதற்கும் வேறுபாடு உண்டு. சார்ந்து வாழ்தல் என்பதே மெய்யான வாழ்வு ஆகும். பாலின விடுதலையும் சார்ந்திருத்தலில்  தான் விளையும்.  எனது அவளான நடப்பியல் நிகழ்வில்: பேருந்து பயணத்தில் நாம் அனைவருமே இதனைக் கண்டு இருப்போம். திருநங்கைகள்  உதவி கேட்பதையும், உதவி செய்வதையும் (ஆசிர்வதிப்பது). முதுகலை முடித்த கையோடு அவள் கல்வி சார்ந்த அடுத்த...

திரைப்பட விமர்சனம் (கொட்டுக்காளி -இறைவி)

                                      இறைவி, கொட்டுக்காளி வழி பெண்ணுடல்                  எனும் கூடுகள் - சிவனி இறைவி - கொட்டுக்காளி இவ்விரு திரைப்படங்களிலும் இந்தியப் பெண்களிடம் இச்சமூகம் ஏற்படுத்தியுள்ள ஏற்படுத்துகின்ற ஏற்படுத்தும் ஒழுங்குகளை மட்டுமே பேசவருவதாகத் தெரியவில்லை. பொதுவாகப் பெண்கள் எல்லா இடத்திலுமே ஆண்களால் மட்டுமல்ல அனைத்தாலும் வஞ்சிக்கப்டுகின்றனர். என்னைக் கேட்டால் பெண்களுக்கு விடுதலை என்பதே கிடையாது என்றே கூறுவேன். ஏனென்றால் அதில் பல்வேறு புரிதலுக்கான சிக்கல்கள் உள்ளன. இதுவரை அதற்கான முன்னெடுப்புகளைத் தெரிந்துக் கொள்வதற்கே பெண்கள் தனது வாழ்க்கையின் முக்கால்பங்கு காலத்தைச் செலவிடுவதாகத் தெரிகிறது. நான் சிறுபான்மையாகப் பொருளாதார சுதந்திரத்தை மட்டுமே பெற விரும்பும் பெண்களைக் கருத்தில் கொண்டு பேசவில்லை. முக்கால்பங்கு  காலம் என்பது பெண்களுடைய வயதை வைத்து அல்ல. தான் சுயச்சையாக வாழ, பெண்களுக்குத் தேவைப்படும் காலத்தை முக...

இல் ஆள்

படம்
பெண் கேட்கிறாள்... கதவு நன்றாக தாழிட்டுள்ளதா... ஆம்...  ஏன் எப்போதும் உனக்கு அந்த அடைத்தலில் இவ்வளவு சந்தேகம்.. நீ நிர்வாணமாக இருந்தாலும் போவது என் மானம் தானே... ஆம்... பெரும்பாலும் வெளி பக்கம் தாழிட்ட கதவுக்கு  எந்தப் பிரச்சினையுமில்லை... _____ குற்றசாட்டிற்கான மொழி தனது வாக்கிய அமைப்பில் தன்னை விலக்கிக் கொண்டு முழுமையடைதலைப் பெறுகிறது... விலக்கி கொள்ளுதலினால் குற்றம் விழைந்திருக்குமே ஒழிய வேறெதும் என் கண்ணிற்கு படவில்லை _____ மெய் இழந்த கவிதைக்காக ஆயிரம் மெய்யுள்ள கவிதைகள் எழுத்தினால் நினைவு கூறுகின்றன. ______ எழுதப்பட்ட கவிதைகளின் பேனாக்கள் தங்களது உரிமங்களை அவ்வப்போது புதுப்பித்துக் கொள்கிறன. அவைகளின் உரிமையாளர்களை கிசுகிசுத்துக் கொண்டே.... ____ 

செந்தீ

மறைதலினாலும் உதித்தலினாலுமே நம் நினைவுக்கு வருகிறான் செஞ்சூரியன்.....  பகலவன் அவன் தான்...  அவனது இருப்பை நாம் உணர்வதேயில்லை..  ஆதலாலே திட்டித்தீர்த்தாவது நினைத்திட செய்கிறான் பங்குனியிலும் சித்திரையிலும்...  _____ பிறர் சுதந்திரத்தின் மீதான சந்தேகங்களே நம் சுந்திரத்தின் எல்லை... நாமும் அடைவதில்லை.. பிறர் அடைவதில் விருப்பமும் கொள்வதும் இல்லை 😠 ____

நீலாடல்

இயலாது என்று இங்கொன்றுமில்லை. ஆனால் உருப்படியானது என்று இங்கெதுமில்லை.  கடுங்குளிறோ.. வாடைக்காற்றோ.. கடலிடமிருந்து வந்தால் அம்மீனவர்களுக்கு அது காதல் பரிசல்லவோ..  இரவெல்லாம் பெரும் தனிமையில் உன்னோடு(கடல்) நானும்..  என் உயிர்கலந்த உன் காற்றும்..  போதவில்லை..  சில நாழியாவது உன்னுள் ஊடுருவ சொல்கிறது.. என் கண்கள்.. 

கனலி

படம்
படம்
நிரந்தரங்களைத் தேடி செல்வதில் எப்போதும் மனமில்லை.  ஏனெனில் அது உண்மையில்லை..  நாடங்களை கதை புரியும் வரை மட்டுமே பார்க்க முடியும்...  பொழுது போக்கவோ..  இருப்பிற்காகவோ பார்க்க முடியாது. 
என்னிடம் நரைக்காத முடிகளும் உள்ளதென,  உதிர்ந்த கருமையான முடிகள் சொல்லிச்செல்கின்றன.... 

பொருள்

நானாக அப்பொருளைத் தேடிக்கொள்ளவில்லை...  அதற்காக ஆசையும் படவில்லை..  எவ்விதத் தொடர்புமே இல்லை எனக்கும் அப்பொருளுக்கும்..  தானாக வந்தது..  உன்னுடனே இருப்பேன்..  பாதியில்..  இது நிரந்தரமல்லாத வன்முறையான வாழ்க்கை. நாம் பிரிவோம் என்றது..  நானே வலுக்கட்டாயமாக பிடித்திலுத்தேன்...  உடையும் நிலையில்.. நானே அதனைக் கொண்டு சென்றேன்..  விட்டுவிட்டேன்... மீளவில்லை..  மீளாது மீண்டாலும் என் மனம் அப்பொருளோடு வாழாது.. 

மாதவிடாய்

வாழ்வின்றிப் போரின் உதிரம்தானே வலிய நுண்ணிய வலியினைக் கொண்டுதானே உன் வாழ்வின் பெரும் கீறலான வெட்டென மாதந்தோறும் நடக்கும் மாநிலத்தில் ஓர் உண்ணவியலா உணர்ச்சியதுவே... உண்ணவியலா இறைச்சியதுவே..  உண்ணும் பழக்கப் பிறப்பதுவே...  துக்கமில்லா வீட்டில் வீரியம் கொண்ட பேரழுகைச் சத்தம் ஒன்று..  நாதியற்று கிடந்து, தனது மூன்று, ஐந்தென நாட்களைக் கழிக்கிறது.. 
தூதரகம் போன்ற அழைப்பினில் தும்பி போல் அமர்வதும் இயற்கையே நலன்விரும்பிகளின் சேர்க்கையே ஒரு பிடிப்பை ஏற்படுத்துகிறது இவ்வாழ்வின் மீது.. 

தென்றல்

கடுமையான வியர்வையும், அசௌகரியத் தன்மையையும் நெடுநாட்கள் அனுபவித்ததில்லை....  என்றாவது தென்றல் வந்து தழுவும் என்பதற்காக..  தினம் தினம் என்னை சுவீகரித்துக் கொள்வதால்..  இடப்பெயர்வின் போது மனம் ஏனோ சமநிலையை அடைவதுபோல் நினைவு..  ஒருவர் பார்வையில் சமமானவராக, மற்றொருவர் பார்வையில் கீழானவராக..  இதுவே பெரும் சமத்துவநிலையாகவே படுகிறது.. இப்பால்மனதிற்கு.. 
செத்துப்போக மனமில்லை.  சாவக்கண்டு பயமில்லை..  மனிதர்களோட கூட்டமாக வாழ விருப்பமில்லை..  அதற்காக மனிதர்கள வெறுக்கல..  இவுலகம் எனக்களிக்கும் இரக்கப்பார்வையும், அருவருப்புப்பார்வையும் ஒரே மாதிரியாகவே தெரிகிறது...  இதனால் எனகெந்த நற்பயனும் இல்லை..  கருணை கொண்ட உண்மையான உள்ளம் இரக்கத்தன்மையை மிஞ்சியே நிற்கும்.... அதுவே உண்மை. 

தெய்வங்களுக்கு நடத்தப்படும் அபிஷோகங்களும், பூசைகளும்

 பாலாபிஷோகம் தொடங்கி பஞ்சாமிர்தபிஷோகம் வரை உனக்கு நடத்தப்படுகிறது.. அது போற்றி வணங்குதல் இல்லை.  நாங்கள் வயிறு வாடிய நிலையில் உள்ளோம் என குறிப்பால் உணர்த்தும் தூற்றி வணங்குதல் நிலையே..  நீ வந்து உதவாவிடினும் உன்னால் உடுத்த முடியாத பட்டாடையும், சுவைக்க முடியாத உணவையும், உன் உடம்பில் பதிக்க முடியாது போன ஆபரங்களையும் எங்கள் துயர் நீக்க தரலாமே..  கல்லிடம் மனம் இருப்பதாக நினைக்கும் இந்த கல் நெஞ்சக்கார்களின் மனத்தில் வாழுகிறாயே.. கல்லாய் போன கடவுளே... நான் கடவுள் மறுப்பாளர் அல்ல. எனக்கென்று ஒரு கடமை இருக்கிற பொழுது, அக்கடவுளுகென்று ஒரு கடமை இருக்கிறது.. அதை  செய்ய தூண்டுகிறேன்..  நான் தவறிழைக்கும் போது என்னை தண்டிக்க எவ்வளவு உரிமையை எடுக்கிறாரோ.. அதே உரிமையை அவர் கடமையைச் செய்ய மறுக்கிறபோது நாமும் கையில் எடுப்பதில் தவறில்லை. .. 

விடுதலை எங்கே

நிரபராதி ஒருவர் தன்னைச் அரசின் சிறைச்சாலையிலிருந்து விடுவித்து கொள்கிறார்.  பின்னர் வெளியுலத்திடம் இருந்து தன்னைக் காக்க வேண்டும் என்பதற்காக, தனக்கான சிறைச்சாலையைத் தானே கட்டிக் கொள்கிறார்..  விடுதலை வாழ்வெங்கே?..  அடைபட்டுக் கிடந்தோம் ஒருநாள். இப்போது அடைபடுவதற்காகவே போராடி பெறுகிறோம் உரிமையை.. 

இல்லாத காலங்கள்

எதிர்காலத்திலேயே நம்முடைய சிந்தனை எல்லாம்...  ஆம் தானே..  நாளை என்று தானே அத்தனையும் விடுகிறோம்..  நாளை பார்த்துக் கொள்ளலாம், நாளை செய்துக் கொள்ளலாம்..,  எல்லாம் நாளைச் சரியாகிவிடும்..  இது போன்ற எண்ணங்களுக்கு இன்று என்பது அடித்தளம் ஆகிறது..  என்பதையே மறந்து நாளை என்றொரு கண்ணாடி வீட்டினைக்கட்டிக் கொண்டிருக்கிறோம்..  இல்லை.. என்றால் இருக்கவே செய்கிறான் இறைவன் என்று இல்லாத ஒருவனிடம் பழியைப் போட்டுவிடுவது..  விதி, நேரம், என்ற படர்கை காரணங்களால் பரிசுத்தமான நம்மை அவ்வினையில் இருந்து விளக்கிக் கொள்வது..  இவ்வுலகில் நாம் தானே ஆதிக்கம் நிறைந்தவர்களாக உள்ளோம்..  எல்லாவற்றுக்கும் நாம் தானே காரணம் என்பதையும் ஏற்றுக் கொண்டு தானே ஆக வேண்டும்..  அழிப்பதில் முதன்மை நாம்.. விலகுவதிலும் முதன்மையே..  ஆக்குவதிலும் அவ்வாறு இருப்போம்... ஆக்கம் நிறைந்தவர்களாக மாற்றம் கொள்வோம்..  நல்லதொரு மாற்றத்தினை உண்டு பண்ணுவோம்..  சமதர்மத்துடன் வாழும் மாற்றத்தினை பெறுவோம்..  புதிய சிந்தனை, செயல்பாடு போன்றவை தோன்றட்டுமே... 

சொல்வது அவள்

இவ்வுலகத்தின் அழிவும் ஆக்கமும் எழுத்தில் உள்ளது...  அவரவர் எண்ணத்திலும் கூட...  தூய சிந்தனையும், முற்போக்கான எழுத்துமே சமத்துவமான சுந்திரத்திற்கான வழி...  அறநூல்களை கற்பதும்... நல்வழியில் நடப்பது போன்ற பாவனை செய்வுதும் ஆகாது...  அனைத்தையும் படித்துக் கொண்டிருக்கும் அவ்வேளையில் நடிப்பதையும் தொடக்கம் செய்கிறோம்...  சரியாக நடக்க விரும்பும் போதெல்லாம் இந்த வயதில் இப்படி தான் தோன்றும், காலம் கடந்தால் நீயும் வாழ்க்கையைத் தேடி ஓடி விடுவாயென நம்மை பின்னுக்கே இழுக்க முயற்சிக்கும்.. மனிதர்கள் வாழ்க்கை என்பதற்கு பல விளக்கங்களை வயதிற்கு ஏற்றாற்போல் அமைத்துக் கொள்கிறது இச்சமூகம்...  நல்லதை செய்யெனவும், பிறருக்கு உதவெனவும், குடும்பத்தைப் பாரெனவும், பிறருக்கு தெந்தரரவு செய்யாமலிருந்தால் போதுமெனவும் இன்னும் பல. நேரத்திற்கும்  இடத்திற்கும் ஏற்றது போலமையும்... இவ்வாழ்கைக்கான விளக்கங்கள்...  என்னவோ உன்உயிரின் சுவாசத்தை உணர்.. பின் அனைவரின் சுவாசத்தையும் கவனி.. எல்லாம் வெவ்வேறு விதம்... அதனதன் போக்கில் சுதந்திரமாக இருந்தால் போதுமென நினை..  சுவாசத்தில் நஞ்சு இருப...

அவள் தனக்காகவும் வாழட்டுமே..

 அவள் மீது இவ்வுலகிற்கு அச்சம்..  ஆதலால்  தான் அவளை பல வகையான கட்டுக்குள் கொண்டுவர நினைக்கிறது...  அவளை சித்தரவதைச் செய்தும் இவ்வுலகத்திற்கு மனம் அசையவில்லை..  அவள் மூலமாக அவளையே கொடுமை செய்கிறது இவ்வுலகம்... காலத்தின் பிடியிலும் இவ்வுலகத்தின் பிடியிலும் சிக்கித் தவிக்கிறாள்.. அவள் தன்னை மீட்டெடுக்க நினைக்கும் போதெல்லாம் அவளைக் கடவுளெனவும், பூமி போன்றவளெனவும், சில பண்புகளை அவளுக்கேயுரியதென கூறி மடைமாற்றம் செய்கிறதிவ்வுலகம்...  அவளும் என்ன செய்வாள்.. மாற்றத்திற்கான வழிகளை தேடுவதைத் தவிர..  இவ்வுலகில் உள்ள அனைத்தும் வியக்கக் கூடிய ஆச்சரியங்களைக் கொண்டவை..  அவளும் அவள் போன்றோரும் இதில் இல்லையென சொல்வதற்கு இவ்வுலகம் முயற்சிக்கிறது..  பிறரை பார்த்து முடிவெடுக்கும் கண்களை அவள் பிடிங்கி எறிகிறாள்..  பிறரின் நலன் விரும்பியாக இருப்பதில் அவளுக்கு மகிழ்வு தான்..  ஆனால்,  அவள் தனக்காகவும் வாழட்டுமே..  அவள் முடிவுகளில் அவளிருக்கட்டுமே..  அவள் தனக்காகவும் கனவு காணட்டுமே...  அப்பொழுது தான் மற்றவர்களுக்கான இவ்வுலகத்திற்காக எத்தன...

அவளின் மொழிகள்

அன்பென்பதும், பாசமென்பதும், காமமென்பதும் வேறும் உணர்வு தான்...  அடடா! அவள் இவ்வுலகைப் புரிந்து விட்டாள் போலும்..  இதில் என்ன வியப்பென்றால் என்னை அவள் வழி நடத்த சிறிதும் விரும்ப வில்லை.. அவள் போல் மாற என்னை கட்டாயப்படுத்த வில்லை..  அது தான் அவள்.. என்றாள்  என்னிடம்..  உனக்கு புரியும் போது நீ தனித்த சுதந்திரத்தைக் காண்பாய்...  அச்சுதந்திரம் உனக்கு நிம்மதியையும், உழைக்கும் நம்பிக்கையையும் தரும்...  என்னை விட இவ்வுலகத்தை வேறு விதமாக  நீ ரசிக்கலாம்..  என்பதே அவள் எனக்கு  தந்த உபதேசங்கள்...  எனக்காச்சரியம்..  அவள் எவ்வளவு தீர்க்கமாய் பேசுகிறாள்.. அவள் முன்னாளில் இருந்ததை விட நிம்மதியாய் அலைந்து திரிகிறாள்..  யாரும் அவள் முதுகில் இல்லை..  அவளும் யார் முதுகிலுமில்லை...  அவளுடைய  சுகதுக்கங்களை அவளே பார்த்துக் கொள்கிறாள்... யாருடைய வழி நடத்தையலையும் எதிர்பார்க்க வில்லையவள்....  இத்தனையும் இப்போது உணர்ந்து கொண்டே ஒரு புன்சிரிப்பு.. என்னிதழில்.. 🙂 இந்த காலங்கள் எவ்வளவு கற்றுக் கொடுத்துள்ளது.. விளைவுகளை மட்டும் நின...

விவரி உன்னியல்பை

                   அந்தச் சிட்டுக்கு சிறகு உள்ளது..                    உங்களுக்கு கால்கள் மட்டுமே ஏன் தெரிகிறது.                      அதற்கு பறக்கவும் தெரியும்.. அது பறந்து தான் பார்க்கட்டுமே..                     அது பறப்பதால் உங்களது வரலாறு குலையப் போவதில்லை.. ஆகமங்களும் சடங்குகளும் அதோடு நின்று விட போவதில்லை...  பிறகேன் அப்பறவையின் சிறகுகளை வரலாறு , ஆகமங்கள், சடங்குகளைக் கொண்டு துடிதுடிக்க வெட்டுவதும் ஒடித்துடுவதுமான செயல்களைச் செய்கிறீர்..  அச்சிட்டை விடுவியுங்கள்.. ஏன்? அப்பறவையை பயம் கொள்ளச் செய்கிறீர்..  அன்பென்றும், பாசமென்றும் நாடகமாடுகிறீர்..  அது பறவை பறக்கட்டும்.. அதற்கான கூட்டை அதுவே கட்டி கொள்ளட்டும்..  அச்சிட்டை விடுவியுங்கள்

அவள் புதிது

https://kasthurigai.blogspot.com/ அவள் ஏனோ அங்கு நின்றுக் கொண்டிருக்கிறாள் அவள் ஏனோ அங்கு நின்றுக் கொண்டிருக்கிறாள் உலகெங்கும் அவள் மீதான கேள்வி அது அவள் நினைவில் இந்நாள் எனக்கு பிடித்தவாறு கடந்து விட்டது என்று சந்தோசம்...  உலகக்கேள்விகளை அவள் கண்முன் கொண்டு வருவதில்லை..    ஏனென்றால் அக்கேள்விகளில் அவளில்லை.. இவ்வுலகமாக அவர்களே உள்ளார்கள் அக்கேள்வியில்...  அவள்போல் வாழ இவ்வுலகிற்கு ஆசை தான்..  சடங்காய் போன விமர்சனங்களைக் கண்டு நின்று தவித்துக் கொண்டிருக்கிறது இவ்வுலகம்...  அவளுக்கு ஒவ்வொரு நாளும் புதுமையான அனுபவங்கள், மகிழ்வுகள் வந்து சேர்கின்றன..  இவ்வுலகின் கனவுகள் கட்டமைக்கப்பட்டு கட்டுண்டுக் கிடக்கையில்..  அவளது கனவுகள் வானில் சிறகை விரிகின்றன...  அவள் சிறகு பாதிப்படையத்தான் செய்கிறது..  சரி செய்ய கற்றுக்கொண்டு மீண்டும் மீண்டும் மகிழ்கிறாள்.... 🙂

நாளா பக்கமும் அவளது குரலை ஒலிக்கத் தான் ஆசை...

படம்
                    நாளா பக்கமும் அவளது குரலை ஒலிக்கத் தான் ஆசை...      பண்பாடு, கலாசாரம், மதம், இனம், நிறம், காண்பனவெல்லாம் அவளை அடிமைப்படுத்துகிறது..                           சுதந்திரம், போராடும் குணம், விடுதலை தாகம், தோழமை, சமத்துவமென இன்னொன்று அவளை எழச் சொல்லிப் போராடுகிறது.....                             பெண்ணாய் இருக்கிறாய் அடிமையாய் இரு.. அல்லது போராடு என்பதே இவ்வுலகம் அவளுக்கு தரும் அன்பு பரிசு..                         அவள் அடிமையாய் வாழ்ந்தால் சாவதும் அல்லது சாகடிக்கப்படுவதும் பிறர் கையில்...                      போராடினால் சாவாவது அவளது கையில் மிஞ்சும்   ...                    ...

கிளானியா

                                      கிளானியா எப்போதும் போல தன் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச செல்கிறாள். அவளுக்கு பிடித்து செய்யும் வேலையே விவசாய வேலை தான் .                அவளது தோட்டம் அவள் வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் . தோட்டத்திற்கு போகும்போது தூரம் தெரிவதில்லை.... மீண்டும் வருகையில் அரை கிலோ மீட்டர் தூரம், இரண்டு கிலோமீட்டர் போல் மனம் விட்டு போகும் அளவிற்கு தூரம் ஆகிவிடுகிறது அவளுக்கு..                   பெருவாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும் வழியை மடைமாற்றி தன் தோட்டத்திற்கு மாற்றிவிட்டு வயலினூடே வந்து , அடுத்தடுத்த பாத்திகளுக்கு இடையே உள்ள வாய்க்கால்களை சரிசெய்கிறது.                         முழுமையாக சரிசெய்தால் தண்ணீர் தானாகவே பாயும் என் நம்பி செய்தே இருக்கிறாள்.           ...

இயல்பு

படம்
இயல்பு எல்லாமே... இயல்பு சரியோ தவறோ எல்லாமே.... இயல்பு தவற்றைத் திருத்திக் கொள்..  சரியை நடைமுறைப் படுத்திக் கொள்...  இதில் சரி என்பதென்ன தவறு என்பதென்ன என்பதைத் தெரிந்து கொள்..  இயல்பு

என்னோடு நான்

படம்
என்னோடு யாரையும் எதிலும் வேகு தூரம் அழைத்துச் சென்றது இல்லை.. அழைத்துச் செல்வதிலும் எனக்கு ஆசையில்லை...  யாருடைய கனவிலும் நானிருக்கக் கூடாது என்பதே என் ஆசை....  என் கனவுகளிலும் அப்படியே.....  நான் மட்டுமே......  அவரவருக்கு விருப்பு வெறுப்பு உள்ளது...  எதனையும் நான் கண்டு கொள்வதும் இல்லை...  எந்த காரணமும் இன்றி வாழ்ந்தால் போதும் யாரும் யாரையும் அடிமைப்படுத்த தேவையில்லை.... 

காதலாம் காதல்

படம்
 யாரும் காணாத என்னுடலை நீ காண விரும்பியே  என்னிடம் காதலனாய் நடிக்கிறாய்..  உண்மை அறிந்தும் நான் ஏனோ உடலின்பத்தை  அழிக்கும் நிறுவனமல்ல பெண்ணுடல் என  ஒவ்வொரு முறையும் நிரூபிக்க நினைக்கிறேன்...  நீ உன் எண்ணத்திலிருந்து  மாறி என்னையும் சக உயிராக  நினைப்பாய் என  நம்பிக்கையில்லை. ....   உன்னை திருத்தி தான் நான் வாழ வேண்டும் என்ற  அவசியமுமில்லை.....  காலப்போக்கில் என் பருமனான உடலும் உன் ஆசைக்கு இணங்கிய என்னுள்ளமும் இறுகிப் போகக் கூடும்...  அப்போது என் தசைகளால் உனக்கு என்ன பயன் ஆக போகிறது...  உன்னை திருத்தி தான் நான் வாழ வேண்டும் என்ற  எந்த அவசியமுமில்லை.....  மேலும் படிக்க